சிஎஸ்கே தலைமை பயிற்சியாளராக பிளெமிங்கிற்கு பதிலாக மைக்கேல் ஹசி?
மும்பை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டர் ஹசி, பிளெமிங்கிற்குப் பதிலாக அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் இந்திய பேட்டர் வித்யுத் சிவராமகிருஷ்ணனும் இவரது தேர்வை ஆதரித்துப் பேசியுள்ளார்.
பிளமிங் கடந்த 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் SA 20, MLC தொடரில் சிஎஸ்கே அணி வாங்கிய அணிக்கும் பயிற்சியாளராக பிளமிங் செயல்பட்டார். இந்த சூழலில், கடந்த 3 ஆண்டுகளாக பிளமிங் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மாறி வரும் டி20 போட்டிகளுக்கு ஏற்ற வகையில் பிளமிங் இன்னும் தன்னை மாற்றி கொள்ளவில்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் பிளமிங் பதவியிலிருந்து மாற்றப்பட்டார், இந்த சூழலில் தான் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக ஹஸி வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், "நிர்வாகத்தின் முன்னால் உள்ள பெரிய கேள்வி என்னவென்றால், பிளெமிங் போன்ற ஒருவரை அவர்கள் விரும்புகிறார்களா அல்லது புதிய திசையில் பயணிக்க விரும்புகிறார்களா?"
"பிரெண்டன் மெக்கல்லம் போன்ற அதிரடியான மற்றும் சவால்களை ஏற்கும் அணுகுமுறையைக் கொண்ட ஒருவரை அவர்கள் தேர்வு செய்யலாமா? அதைவிட முக்கியமாக, புதிய பயிற்சியாளர் தோனியின் சிந்தனை முறைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்."
"ஹசி தலைமைப் பயிற்சியாளராக இருக்கலாம், ஆனால் அதனுடன் புதிய உதவிப் பணியாளர்களை நியமிக்கலாம். அணியின் தேவைகளை அவர் நன்கு புரிந்துகொள்வார். மேலும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டவர். அவர் நீண்ட காலமாக இந்த கட்டமைப்புடன் பயணித்து வருகிறார்" என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications

