Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்கா என்ன தக்காளி தொக்கா ... இந்தியாவிடம் இதை பண்ண முடியுமா? ஆஸியை விளாசிய வீரர்கள்!

சிட்னி: தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்தது.

ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவால் இந்தியா போன்ற மிகப்பெரிய சக்தி கொண்ட நாடுகளுக்கு எதிராக இந்த முடிவை எடுக்க முடியுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆஸ்திரேலியா விலகல்

ஆஸ்திரேலியா விலகல்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ரத்து செய்தது. வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த தொடரை ரத்து செய்ததாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விளக்கம் கொடுத்தது.

தென் ஆப்பிரிக்கா பாவம்

தென் ஆப்பிரிக்கா பாவம்

ஆஸ்திரேலியாவின் இந்த செயல் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முடிவால் கடும் அதிர்ச்சி அடைகிறோம். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம். இது கடுமையான நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவின் செயலுக்கு பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் கேள்வி

மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் கேள்வி

ஆஸ்திரேலியாவில் கொரோனா இருக்கும்போது இந்தியாவுடன் மட்டும் விளையாடியது எப்படி? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்துக்கு இங்கிலாந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் ஆகியோர் சராசரி கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக முடிவு எடுக்க முடியுமா?

இந்தியாவுக்கு எதிராக முடிவு எடுக்க முடியுமா?

இது தொடர்பாக மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறுவது விளையாட்டிற்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அவர்கள்(ஆஸ்திரேலியா) இந்தியா போன்ற மிகப்பெரிய சக்தி கொண்ட நாடுகளுக்கு எதிராக இந்த முடிவை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

கிரிக்கெட் இருண்ட காலம்

கிரிக்கெட் இருண்ட காலம்

இதேபோல் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பதிவில், தென் ஆப்பிரிக்கா தொடரை கொரோனா காரணமாக ஆஸ்திரேலியா ரத்து செய்திருப்பது கிரிக்கெட்டின் இருண்ட காலம் ஆகும். ஏற்கனவே கொரோனா காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து இங்கிலாந்தில் பாதியில் வெளியேறியது. ஆனால் இதே இங்கிலாந்து, இலங்கையில் சிலருக்கு தொற்று இருந்தபோதும் அங்கு விளையாடியது என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 5, 2021, 8:27 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+