Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கோலியை விட ஜோ ரூட் தான் பெஸ்ட்'.. மைக்கேல் வாகன் டீவீட்டும், ரசிகர்களின் பதிலடியும்

இங்கிலாந்து: இந்திய கேப்டன் விராட் கோலியை விட, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஸ்பின் பந்துகளை சந்திப்பதில் வல்லவர் என்று முன்னாள் இங்கி., வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கமாண்டிங் பொசிஷனில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 578 ரன்கள் குவிக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் மட்டும் எடுத்தது.

ரிஷப் பண்ட் 91, வாஷிங்டன் சுந்தர் 85, புஜாரா 73 ரன்கள் எடுத்ததால் இந்த ஸ்கோர் கிடைத்தது. இல்லையெனில், இந்திய அணியின் நிலைமை பரிதாபமாகியிருக்கும்.

அதேசமயம், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய இந்தியா, இங்கிலாந்தை 178 ரன்களில் கட்டுப்படுத்தியது. அஷ்வின் 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 ரூட் தான் பெஸ்ட்

ரூட் தான் பெஸ்ட்

இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரரும் கேப்டனுமான மைக்கேல் வாகன் கோலி - ரூட் கம்பேரிசனை கையில் எடுத்திருக்கிறார். அதில், ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக கோலியின் ஆவரேஜ் 69.0 என்றும், ரூட் ஆவரேஜ் 70.7 என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

 சிறந்த பேட்ஸ்மேன்

சிறந்த பேட்ஸ்மேன்

குறிப்பாக, ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரூட் ஆவரேஜ் 71.2 என்றும், கோலி ஆவரேஜ் 53.1 என்றும் டீவீட்டியுள்ளார். ஆகையால், ஸ்பின் பந்துவீச்சில் கோலியை விட ரூட் சிறந்த பேட்ஸ்மேன். இது தான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.

 சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

இதற்கு ரசிகர்கள் ஆற்றும் எதிர்வினை பற்றி சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? வாகன் டீவீட்டுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ரூட் ஆவரேஜ் இந்தியாவில் 66, இலங்கையில் 54, ஐக்கிய அரபு அமீரகத்தில் 57.. மற்ற நாடுகளில் என்ன வைத்திருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 யார் உண்மையில் பெஸ்ட்?

யார் உண்மையில் பெஸ்ட்?

சிலரோ, கோலியின் மொத்த சதம் 70. ரூட்-ன் சதங்கள் 35. இப்போ சொல்லுங்க யார் பெஸ்ட்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் இது அரைகுறை stats என்றும், அரைவேக்காட்டுத்தன ஒப்பீடு என்றும் பதிலளித்து வருகின்றனர்.

Story first published: Monday, February 8, 2021, 16:58 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+