Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

14 ஆண்டுகால இந்திய அணியின் காத்திருப்பு.. இந்த முறை நிறைவேறும்.. மைக்கேல் வாகன் கணிப்பு

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முடிவை சரியாக கணித்திருந்த மைக்கேல் வாகன் அடுத்ததாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவை கணித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதனையடுத்து அனைவரின் கவனமும் அடுத்ததாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பியுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட். 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 6 வாரங்கள் நாட்கள் இங்கிலாந்திலேயே தங்கியிருக்கவுள்ள இந்திய அணி வீரர்கள், வலைப்பயிற்சி மற்றும் இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டங்களில் ஈடபவுள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு முறை கூட இங்கிலாந்து அணியை அதன் மண்ணில் வீழ்த்தியதில்லை. 2007ம் ஆண்டுக்கு பிறகு 2011, 2014,2018 என மூன்று முறை டெஸ்ட் தொடர்கள் இங்கிலாந்து நடைபெற்றன. ஆனால் அனைத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனவே வரவிருக்கும் டெஸ்ட் தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேட்டிங் பிரச்னை

பேட்டிங் பிரச்னை

இந்நிலையில் இந்த முறை இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது கடினம் தான் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமாக தோல்வியடைந்தது. அதனை வைத்து பார்க்கும் போது இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சற்று பின் தங்கியுள்ளது.

 சிரமம் தான்

சிரமம் தான்

பட்லர், பென் ஸ்டோக்ஸ், க்ரிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள். இது அணியின் பலத்தை அதிகரிக்கும். ஆனால் பேட்டிங் வரிசையில் மாற்றம் வேண்டும். சிறந்த பவுலிங்கிற்கு எதிராக அதிக ரன்கள் அடிக்கும்படியாக தற்போது இல்லை. அவர்கள் இந்திய அணியை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே இந்திய அணியை இந்த முறை வீழ்த்துவது என்பது இங்கிலாந்துக்கு சிரமமான ஒன்று தான் எனக்கூறியுள்ளார்.

Story first published: Saturday, June 26, 2021, 21:39 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+