Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விராட் கோலி இதை செய்தே தீரணும்”.. ஃபார்முக்கு திரும்ப என்ன வழி.. மைக்கேல் வாகன் முக்கிய அட்வைஸ்!!

மும்பை: விராட் கோலி தற்போது ஒரே ஒரு விஷயத்தை செய்தால் மட்டுமே ஃபார்முக்கு வர முடியும் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பேசியுள்ளார்.

இன்று இந்திய கிரிக்கெட் உலகம் முழுவதும் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ள விஷயம் விராட் கோலியின் டி20 எதிர்காலம்.

உலகின் நம்பர் 1 வீரராக விளங்கிய விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதமே அடிக்காமல் உள்ளார்.

விராட் கோலி பரிதாபம்

விராட் கோலி பரிதாபம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 20 ரன்களையும் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இதனால் அடுத்து வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி புறக்கணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாகனின் அட்வைஸ்

வாகனின் அட்வைஸ்

இந்நிலையில் கோலிக்கு முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் முக்கிய அட்வைஸை கூறியுள்ளார். நான் விராட்டை உற்று நோக்கி வருகிறேன். ஐபிஎல் முடிந்தவுடன் அவருக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. ஆனால் அவருக்கு இன்னும் நாட்கள் தேவை எனத்தெரிகிறது. அவர் 3 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, கடற்கரை ஓரமாக சென்று முதலில் மனநிம்மதி அடைய வேண்டும். அவரின் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நாட்களை கழிக்க வேண்டும்.

என்ன காரணம்

என்ன காரணம்

கோலியின் 20 ஆண்டுகால வெற்றிகரமான கிரிக்கெட் பயணம் இப்படியே முடிவடைந்துவிட கூடாது. ஏனென்றால் அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் ஆகும். 3 மாத இடைவெளி என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. அது கோலிக்கு பலனை தான் கொடுக்கும் என வாகன் கூறியுள்ளார்.

ரசிகர்கள் திடீர் சோகம்

ரசிகர்கள் திடீர் சோகம்

விராட் கோலி அடுத்ததாக இங்கிலாந்துடனான 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்த தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து தான் டி20 உலகக்கோப்பை தொடரின் வாய்ப்பு முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Story first published: Thursday, July 7, 2022, 22:00 [IST]
Other articles published on Jul 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+