Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘மேட்ச் ஃபிக்ஸிங் செய்த நியாபகம் இருக்கா’ விராட் கோலியால் அடித்துக்கொள்ளும் முன்னாள் வீரர்கள்..

விராட் கோலி குறித்த பேச்சால் ஆஸ்திரேலியாவின் வாகன் மற்றும் பாகிஸ்தானின் சல்மான் பட்டிற்கும் இடையே வார்த்தை போர் உருவாகியுள்ளது.

Recommended Video

Kohli- Williamsonல் ஆரம்பித்த சண்டை ! Salman Butt- Vaughan கிட்ட முடிந்தது | OneIndia Tamil

இங்கிலாந்தில் வரும் ஜூன்18ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கிறது.

இந்த தொடரில் விராட் கோலி பெரியாளா? அல்லது வில்லியம்சன் பெரியாளா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது. அதில் மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துதான் தற்போது பூதாகரமாகியுள்ளது.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

நியூசிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த வாகன், விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்கள் மற்றும் அதிக லைக்குகள் கிடைப்பதால் தான் உலகின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். கேன் வில்லியம்சனுக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்றாலும் விராட் கோலிக்கு சமமானவர் தான். அவர் தான் இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிப்பார் எனத்தெரிவித்தார். இந்த கருத்து கோலி ரசிகர்களை சூடாக்கியது.

 கோலிக்கு ஆதரவு

கோலிக்கு ஆதரவு

இதற்கு பதிலளித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், விராட் கோலி திறமையால் தான் சிறந்த வீரராக உள்ளார். சர்வதேச போட்டிகளில் அவர் 70 சதங்கள் அடித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் யாரும் அதனை செய்ததில்லை. கோலியை பற்றி வாகன் ஒப்பிடுவது பயனற்ற ஒன்று. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் ஓப்பனராக களமிறங்கும் அவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. நேரம் போகவில்லை என்றால் இப்படி எதையாவது கிளப்பி விடுகிறார்கள் எனக்கூறியிருந்தார்.

வாகன் பதிலடி

வாகன் பதிலடி

இந்நிலையில் இதனை அறிந்து பொங்கி எழுந்துள்ளார் மைக்கேல் வாகன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சல்மான் என்னை பற்றி பேசியதாக அறிந்தேன். கருத்து தெரிவிப்பதற்கு அவரின் உரிமை. ஆனால் கடந்த 2010ம் ஆண்டு அவர் மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேடு செய்து சிக்கியதை பற்றி நன்கு தெரிந்துவைத்திருப்பார் என நினைக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

மௌனம் காக்கும் இருவர்

மௌனம் காக்கும் இருவர்

விராட் கோலிக்கு - கேன் வில்லியம்சன் குறித்து ஓப்பீடு செய்ய தொடங்கி தற்போது முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்ச் ஃபிக்ஸிங் உள்ளிட்ட தனிப்பட்ட தாக்குதலில் அவர்கள் இறங்கிவிட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் விராட் கோலி மற்றும் வில்லியம்சன் இருவருமே வாய் திறக்கவில்லை.

Story first published: Sunday, May 16, 2021, 17:38 [IST]
Other articles published on May 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+