For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் மீது ஐசிசி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வம்புக்கு இழுக்கும் இங்கிலாந்து மாஜி கேப்டன்

By Veera Kumar

லண்டன்: ஆன்டர்சனிடம் வம்பிழுத்த, அஸ்வின் மீது ஐசிசி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நேற்று முடிவடைந்த 4வது டெஸ்ட் போட்டியின்போது, பேட் செய்ய வந்த இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டான ஆன்டர்சனை நோக்கி, இந்திய ஸ்பின்னர் அஸ்வின் ஏதோ சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.

Michael Vaughan questions ICC, wants R Ashwin punished

இதுகுறித்து மைக்கேல் வாகன் டிவிட்டரில் ஐசிசிக்கு எழுப்பியுள்ள கேள்வியில் பென் ஸ்டோக்சை கண்டித்த நீங்கள், அஸ்வினுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளார்.

மொகாலி டெஸ்டில் கோஹ்லியை பார்த்து பென் ஸ்டோக்ஸ் முனுமுனுத்ததால், அவரை ஐசிசி எச்சரித்திருந்தது. ஆனால் அஸ்வினை ஐசிசி எதுவும் சொல்லவில்லை.

இதுகுறித்து நேற்று கோஹ்லி கூறுகையில், எனது பேட்டிங் திறமை குறித்து ஆன்டர்சன் கூறியதால் அஸ்வின் ஆத்திரத்தில் இருந்தார். அதுபற்றியே அவர் ஏதோ சொன்னார். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சமாதானப்படுத்தினேன். ஆனால் அஸ்வின் கெட்ட வார்த்தை எதையும் பேசவில்லை. இவ்வாறு கோஹ்லி கூறியிருந்தார்.

Story first published: Tuesday, December 13, 2016, 15:00 [IST]
Other articles published on Dec 13, 2016
English summary
Former England captain Michael Vaughan has questioned the International Cricket Council (ICC) for not punishing India's star spinner Ravichandran Ashwin after his confrontation with paceman James Anderson during the 5th day of the 4th Test in Mumbai.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+