Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நட்புக்காக ஷேன் வார்னே செய்த விஷயம்.. கண்ணீர் மல்க கூறிய மைக்கேல் வாகன்.. இவ்வளவு நல்ல காரியங்களா?

ஆஸ்திரேலியா: ஷேன் வார்னேவுடன் நட்புக்காக என்னவெல்லாம் செய்வார் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியிருப்பது ரசிகர்களுக்கு கண்ணீர் வரவழைத்துள்ளது.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

நன்றாக பேசி, பழகி வந்தவர் நேற்று திடீரென உயிரிழந்துவிட்டதாக கேட்டு கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக மைக்கேல் வாகனை கூறலாம்.

வார்னேவின் நட்பு

வார்னேவின் நட்பு

ஷேன் வார்னே மற்றும் மைக்கேல் வாகன் இருவரும் களத்தில் பெரும் எதிரிகள் ஆகும். அவர்கள் எப்படி மோதிக்கொள்கிறார்கள் என்பதை பார்க்க களத்தில் தனி ரசிகர்கள் இருந்தனர். ஆனால் களத்திற்கு வெளியில் அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகும். ஓய்வுக்கு பிறகும், அடிக்கடி அவர்கள் இருவரும் வெளியே செல்வதுண்டு. இந்நிலையில் வார்னேவின் மறைவால் வாகன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

மனமுடைந்த வாகன்

மனமுடைந்த வாகன்

இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் என்ன மனநிலையில் தற்போது இருக்கிறேன் என்பது உங்களுக்கு புரியாது. ஒரு எதிரியாக இருந்துவிட்டு, பிறகு மிக நெருங்கிய நண்பர்களாக ஆவது எவ்வளவு அருமையான விஷயம் தெரியுமா?.. அதற்கு வார்னேவின் மனம் தான் காரணம். ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை விட வார்னே துடிப்பான மனிதர். ஓயவறையில், கமெண்ட்ரி பாக்ஸில், கோல்ஃப் கிளப், சுற்றுலாக்கள் என அனைத்து இடங்களிலும் அவரால் தான் நான் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன்.

முதல் நபராக உதவி

முதல் நபராக உதவி

நான் ஒருமுறை தனிமையில் வாடிய போது, எனக்காக முதல் ஆளாக வந்து நின்றவர் ஷேன் வார்னே தான். அவரும், அவரது குடும்பத்தினரும், என்னை அழைத்துச்சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட வைத்தனர். அவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் எனக்கு அது. எனது பார்வையில் அப்போது வார்னே ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். அன்றில் இருந்து பல இடங்களுக்கு நாங்கள் ஒன்றாக சென்றுள்ளோம். ஆனால் இன்று தனியாக விட்டுச்சென்றுவிட்டார்.

சொர்கத்திற்கான அரசன்

சொர்கத்திற்கான அரசன்

அவர் அப்படி இருக்கிறார், இப்படி இருக்கிறார் என நினைப்பார்கள்.. ஆனால் வார்னே ஒரு சாதாரண மனிதர். ஆனால் அவரிடம் உள்ள லெக் ஸ்பின் திறமை உலகில் எந்தவொரு வீரரிடமும் நான் பார்த்ததில்லை. இப்படிபட்ட ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன். கண்டிப்பாக அவருக்கு சொர்கத்தில் ஒரு இடம் இருக்கும். அங்கு அதன் அரசன் சென்றுவிட்டான் என உணர்ச்சிப்பொங்க வாகன் கூறியுள்ளார்.

Story first published: Saturday, March 5, 2022, 9:44 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+