Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாது கருப்பு.கோலியின் வார்த்தைகளால் பொங்கி எழுந்த மைக்கேல் வாகன்.மீண்டும் வெடித்த பிட்ச் சர்ச்சை

அகமதாபாத்: கோலியை தாக்கி மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ள ட்வீட்டால் 4வது டெஸ்டிலும் பிட்ச் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் போது விராட் கோலி பிட்ச் குறித்து பேசியிருந்தார்.

கோலியின் இந்த கருத்துக்கு மைக்கேல் வாகன் கொடுத்துள்ள பதிலடியால் மீண்டும் பிட்ச் குறித்த சர்ச்சை பூதாகரமாய் வெடித்துள்ளது.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

இரு அணிகளும் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் அகமதாபாத் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக செயல்பட்டது. இதனால் இந்திய அணி அவர்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானாலும் பிட்ச் தயார் செய்கிறது எனக்குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஒருபுறம் ஆதரவும் மற்றொரு புறம் எதிர்ப்பும் கிளம்பியதால் சர்ச்சையாக மாறியது.

விமர்சனம்

விமர்சனம்

இன்று 4வது டெஸ்ட் போட்டியின் போது கோலியிடம் பிட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், எங்களின் வெற்றிக்கு நாங்கள் எந்த ஒரு பிட்ச்-ஐயும் குறை சொல்லாமல் ஆடுவது தான் காரணம். நாங்கள் அதுபோன்ற பிட்ச்களில் தான் அதிகம் ஆட ஆசைப்படுவோம். அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். இதுபோன்று பிட்ச் குறித்து ஒரு தலைபட்சமாக பேச அவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என தெரியவில்லை' எனக்கூறினார்.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

கோலியின் இந்த கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர், முதல் டெஸ்டில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறிய போது அவர், பிட்ச் மிகவும் தட்டையாக உள்ளதாக கூறினார். அதற்கு பெயர் பிட்ச் குறித்து குறை கூறுவது இல்லையா? என மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்டம்

ஆட்டம்

ஒரு புறம் பிட்ச் சர்ச்சை இருக்கும் நிலையில் இன்றை டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

Story first published: Thursday, March 4, 2021, 17:24 [IST]
Other articles published on Mar 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+