Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்கை அவரது மனைவி நடுரோட்டில் பளார் என அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்காக 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8643 ரன்களும், 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7981 ரன்களும், 34 டி20 போட்டிகளில் விளையாடி 488 ரன்களும் கிளார்க் அடித்திருக்கிறார்.

மேலும் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது.

மனைவியுடன் மோதல்

மனைவியுடன் மோதல்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் மைக்கேல் கிளார்க் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். காதல் மன்னன் ஆகவே வலம் வரும் மைக்கேல் கிளார்க்குக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆடை வடிவமைப்பாளர் பிப் எட்வர்ட்ஸ் உடன் தொடர்பில் இருந்த கிளார்க் தற்போது ஜேட் என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் கிளார்க் தனது விடுமுறையை தனது குடும்ப உறுப்பினர் உடன் கழித்து வந்தார்.

என்ன சண்டை

என்ன சண்டை

அப்போது மைக்கேல் கிளார்க்கும், அவரின் மனைவியான ஜேடுக்கும் பயங்கர மோதல் வெடித்தது.இதில் மைக்கில் கிளார்கை நடுரோட்டில் வைத்து அறைந்தார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவானது. அதில் ஜேட், உன்னை பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா? நீ அவளுக்கு அனுப்பிய அனைத்து மெசேஜ்களையும் நான் படித்து விட்டேன். இந்தியாவுக்கு அவளை அழைத்துச் செல்ல நீ திட்டம் போடுகிறாயா? கிறிஸ்துமஸ்க்கு முன்பு அவளை நீ வீட்டிற்கு அழைத்து வந்து என்ன செய்தாய் என்று கூட எனக்கு தெரியும்.

கிளார்க் மன்னிப்பு

கிளார்க் மன்னிப்பு

நமது பெட்ரூமில் அமர்ந்து அவளுடன் நீ உல்லாசமாக இருந்ததை நான் தெரிந்து கொண்டேன் என்று கத்தியபடி ஜேட் வீடியோவில் செல்கிறார்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனது முன்னாள் காதலி பிப் எட்வர்ட்ஸ் உடன் மைக்கேல் கிளார்க் மீண்டும் தொடர்பில் இருப்பது தான் தற்போது பிரச்சனைக்கு காரணமாக தெரிகிறது. தனது செயலுக்கு மைக்கல் கிளார்க் மன்னிப்பு கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் என்னுடைய செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். என் மீது நல்ல மதிப்பு வைத்திருந்த அனைவரையும் நான் தலைகுனிய வைத்திருக்கிறேன்.

நீக்கப்பட வாய்ப்பு

நீக்கப்பட வாய்ப்பு

என்னுடைய செயலால்தான் இந்த பிரச்சனையை உருவானது. எனது செயலுக்கு நான் தலை குனிகிறேன், வெட்கப்படுகிறேன் இந்த சம்பவத்திற்கு நான் முழு பொறுப்பை ஏற்கிறேன் .இது என் மீது தான் தவறு என்று கிளார்க் கூறியுள்ளார்.மைக்கேல் கிளார்க்கின் இந்த சம்பவம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல்வேறு விளம்பரத்திலிருந்தும் கிளார்க் நீக்கப்பட்டுள்ளார்.

Story first published: Sunday, January 22, 2023, 12:14 [IST]
Other articles published on Jan 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+