
ஹஸி அறிவுரை
இது குறித்து அறிவுரை வழங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹசி, ரோகித் சர்மாவை பார்த்து எப்படி விளையாட வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் பந்தை எப்படி எதிர்கொண்டு ரன்களை சேர்க்கிறார் என்பதை கவனியுங்கள். சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள ரோகித் சர்மா எவ்வாறு செயல்படுகிறார். பந்தை எப்படி அடிக்கிறார் என்பதை பாருங்கள்.

ரன் சேருங்கள்
இந்திய வீரர்கள் இதே ஆடுகளத்தில் தான் வளர்ந்து இருக்கிறார்கள். இதனால் அதனை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் சொன்னதை கேட்டு விட்டு உடனே ரோகித் சர்மாவை அப்படியே காப்பி அடித்து விளையாட வேண்டாம். ஏனென்றால் என்னால் மேத்தீவ் ஹைடன் போல் விளையாட முடியாது. எனவே ஒவ்வொரு சிறந்த வீரர்களும் எப்படி ரன் சேர்க்க முயற்சி செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அனைத்து பேட்ஸ்மேனுமே ஒவ்வொரு யுத்தியை பயன்படுத்தி ரன்கள் சேர்ப்பார்கள்.

உங்கள் பலம் என்ன
சிலர் பவுண்டரிகளை அடித்து விளையாடுவார்கள். சிலர் தூக்கி அடிப்பார்கள். இன்னும் சிலர் ஆங்கர் ரோல் செய்து நிலையாக நின்று விளையாடி வருவார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் உங்களுடைய பலம் என்பதை என்னவென்று அறிந்து கொண்டு அதற்கு கவனம் செலுத்துங்கள். அதை விட்டுவிட்டு ஒரே ஷாட் ஆடி சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார். பந்து நன்றாக எழவில்லை என்பதை புரிந்து கொண்டு அடுத்த டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தி விளையாடுங்கள். பீட்டர் ஹான்ஸ்கோம்ப் முதல் இன்னிங்ஸில் சரியாக பந்தை கணித்து விளையாடினார்.

அதிர்ஷ்டம் தேவை
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் ரன் சேர்க்க முடியவில்லை. இது போன்ற கடினமான ஆடுகளங்களில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை என ஹஸ்ஸி கூறியுள்ளார். இந்தியாவில் 6 டெஸ்ட் விளையாடியுள்ள ஹஸி சராசரியாக 44.82 அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஸ்ஸியை ரசிகர்கள் மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைப்பார்கள். எனவே ஹஸ்ஸி ஒரு அறிவுரை கொடுத்தால் அது எப்படி சரி இல்லாமல் போகும். இதனைப் புரிந்து கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இதனிடையே இந்தூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இங்கு பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிலைத்து ஆடலாம். மைதானமும் சிறிய அளவு என்பதால் டிராவிஸ் ஹேட், லாபஸ்சேன் போன்றோர் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











