For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL ஏலத்தில் இவங்கள மிஸ் பண்ணாதீங்க..! தோனிக்கு பரிந்துரை செய்த மைக்கேல் ஹஸி..! அப்படி என்ன சிறப்பு?

பெங்களூரு: ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் ஹஸி, தற்போது சி.எஸ்.கே. அணியில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஹஸி ஏலத்தில் சில ஆஸ்திரேலிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

ஹஸி மீது நம்பிக்கை

ஹஸி மீது நம்பிக்கை

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 48 கோடி ரூபாய் எஞ்சியுள்ளது. இதில் மொத்தம் 7 வெளிநாட்டு விரர்களையும், 15 இந்திய வீரர்களையும் எடுக்க முடியும். கிரிக்கெட் பற்றிய நுணுக்கம், அறிவு ஹஸிக்கு அதிகம் இருப்பதால், தோனி எப்போதுமே அவரது பேச்சையும், அறிவுரையும் பெறுவதில் தவறுவது இல்லை. தற்போது ஹஸியே இருவரை பரிந்துரை செய்துள்ளதால் அவர்களை வாங்கியே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் தோனி உள்ளார்.

மார்னஸ் லாபஸ்சேங்

மார்னஸ் லாபஸ்சேங்

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் மார்னஸ் லாபஸ்சேங்கை எப்படியாவது வாங்கிவிடுங்கள் என்று தோனியிடம் ஹஸி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாபஸ்சேங்கால் நிலைத்தும் ஆட முடியும், அதிரடியாகவும் ஆட முடியும். லாபஸ்சேங்கிற்கு ஒரு அளவுக்கு சுழற்பந்தும் வீச தெரியும்..இந்தியா போன்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும்.

ஹஸி உறுதி

ஹஸி உறுதி

இதனால் லாபஸ்சேங்கை தேர்வு செய்தால் தொடக்க வீரராக தாம் என்ன செய்தேனோ, அதை லாபஸ்சேங் செய்வார் என்று ஹஸி உறுதி அளித்துள்ளார். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என இரண்டையும் அடித்து ஆடுவதில் லாபஸ்சேங் வல்லவர். லாபஸ்சேங்கின் திறமையை அறிந்ததாலேயே ஹஸி அவரை பரிந்துரை செய்துள்ளார். வெறும் டெஸ்ட் வீரராக மட்டும் லாபஸ்சேங் அறியப்பட்டுள்ளதால் மற்ற அணிகளும் போட்டி போடாது. இதனால் அவரை அடிப்படை விலையான ஒரு கோடிக்கே வாங்கிவிடலாம் என்றும் ஹஸி தோனிக்கு கூறியுள்ளார்.

ஹைடன் கெர்

ஹைடன் கெர்

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆல்பி மார்க்கெல், சாம் கரண், பிராவோ போன்ற ஆல் ரவுண்டர்கள் தேவை. இதற்கு சரியான தேர்வு ஹைடன் கெர்ராக இருக்கும் என்றும் ஹஸி கூறியுள்ளார். பிக் பேஷ் தொடரில் அரையிறுதியில் 58 பந்துகளில் 98 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 15 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை ஹைடன் எடுத்துள்ளார். மேலும் இவரது அடிப்படை விலை 20 லட்சம். இதனால் ஹைடன் கெரை சென்னை அணி எடுக்க வேண்டும் என்று ஹஸி பரிந்துரை செய்துள்ளார்.

Story first published: Friday, February 4, 2022, 19:30 [IST]
Other articles published on Feb 4, 2022
English summary
Micheal Hussey suggest to Dhoni to Pick 2 Australian cricketers in IPL Auction IPL ஏலத்தில் இவங்கள மிஸ் பண்ணாதீங்க..! தோனிக்கு பரிந்துரை செய்த மைக்கேல் ஹஸி..! அப்படி என்ன சிறப்பு?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+