For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச அணிகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும் -மிக்கி ஆர்தர்

இந்தூர் : சர்வதேச கிரிக்கெட் அணிகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும் என்று இலங்கையின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து பேசிய மிக்கி ஆர்தர், தற்போது இந்தியா நல்ல பார்மில் உள்ளதாக கூறியுள்ளார்.

போதுமான ரன்கள் அடிக்காததே இலங்கையின் தோல்விக்கு காரணம் என்று கூறிய மிக்கி ஆர்தர், அதிகமான பந்துகளை தவறவிட்டதும் தோல்விக்கான முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தூரில் நேற்றிரவு நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தலைமை பயிற்சியாளர் விளக்கம்

தலைமை பயிற்சியாளர் விளக்கம்

இந்த போட்டியில் இலங்கை அணி அதிக ரன்களை அடிக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், மேலும் 20 -25 ரன்கள் அடித்திருந்தால் இந்தியாவிற்கு நெருக்கடியை அளித்திருக்கலாம் என்று கூறினார். இலங்கை அணி அதிகமான பந்துகளை அடிக்காமல் விட்டதும் தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச அணிகளுக்கு ஆர்தர் அறிவுரை

சர்வதேச அணிகளுக்கு ஆர்தர் அறிவுரை

இளம் வீரர்களை ஊக்குவித்து நெருக்கடி நிலைகளில் அவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து பயிற்றுவிக்கும் இந்தியாவிடம் சர்வதேச அணிகள் பாடம் கற்க வேண்டும் என்றும் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

இந்தியா குறித்து ஆர்தர்

இந்தியா குறித்து ஆர்தர்

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் இந்தியா தற்போது நல்ல பார்மில் உள்ளதாகவும் மிக்கி ஆர்தர் மேலும் கூறினார்.

மிக்கி ஆர்தர் ஆலோசனை

மிக்கி ஆர்தர் ஆலோசனை

ஆஸ்திரேலியாவிற்கு இணையாக தற்போது இந்தியா உள்ளதாக குறிப்பிட்டுள்ள மிக்கி ஆர்தர், தங்களை முதலிடத்தில் வைத்துக் கொள்ள ஆஸ்திரேலியா புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நிறைவான இந்திய அணி

நிறைவான இந்திய அணி

இந்தியா அனைத்து வடிவங்களிலும் சிறப்பான அணியாகவே உள்ளதாகவும், டி20 போட்டிகளிலும் அவர்களிடம் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியாது என்றும் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, January 8, 2020, 19:30 [IST]
Other articles published on Jan 8, 2020
English summary
Mickey Arthur gave Huge Compliment on Indian Team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+