For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 3 பேருதான் துருப்புச்சீட்டு..மேட்ச்ச மாத்தப்போறதே இவங்கதான்.. சத்தியம் செய்யும் முன்னாள் வீரர்!

சென்னை: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் காட்டிங் கூறியுள்ளார்.

இங்கிலாந்து இலங்கையை வீழ்த்தியுள்ளதால் இது மிகவும் சுவாரஸ்யமான தொடராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா-இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் கடும் எதிர்பார்ப்புகளுடன் நாளை தொடங்க உள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் கடும் எதிர்பார்ப்புகளுடன் நாளை தொடங்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலாவது டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. 2-வது டெஸ்டில் ரசிகர்கள் போட்டியை நேரடியாக கண்டு ரசிக்கலாம்.

விறுவிறுப்பு இருக்கும்

விறுவிறுப்பு இருக்கும்

இந்தியாவுக்கு உள்ளூர் சூழ்நிலை சாதகமாக உள்ளது. இங்கிலாந்து அணியும் சளைத்தவை அல்ல. அங்கும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். தரமான வீரர்கள் மோதிக் கொள்ளும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் 3 வீரர்கள்தான் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் காட்டிங் கூறியுள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சர் அசத்துவார்

ஜோப்ரா ஆர்ச்சர் அசத்துவார்

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- விராட் கோலி தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்புவதால் இது ஒரு அருமையான தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஸ்டோக்ஸி (பென் ஸ்டோக்ஸ்) நன்கு விளையாடுவார் என்று எனக்குத் தெரியும், ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக அசத்துவார்.

சுவாரஸ்யமான தொடராக இருக்கும்

சுவாரஸ்யமான தொடராக இருக்கும்

ஸ்பின் நன்கு விளையாடும் ஒரு நாட்டில்(இலங்கை) தொடரை வென்று விட்டு, வேறொரு நாட்டில்(இந்தியா) ஸ்பின்னுக்கு எதிராக விளையாடுவது பெரும்பாலும் வித்தியாசம் இல்லை. எனவே இது மிகவும் சுவாரஸ்யமான தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று மைக் காட்டிங் கூறினார். இங்கிலாந்து அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 5, 2021, 8:28 [IST]
Other articles published on Feb 5, 2021
English summary
Former England captain Mike Cutting has said that Virat Kohli, Ben Stokes and Zopra Archer will be the trump cards in the India-England Test series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+