Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாசத்துல நம்மளை மிஞ்சிருவாங்க போலையே!! டி வில்லியர்ஸ் - கோலிக்கு பால் அபிஷேகம்! எதுக்கு தெரியுமா?

Recommended Video

டி வில்லியர்ஸ் - கோலிக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்-வீடியோ

பெங்களூரு : பெங்களூருவில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

ஏபி டி வில்லியர்ஸ்-க்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை ஒட்டியே ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்துள்ளனர்.

ஏபி டி வில்லியர்ஸ் பிறந்த நாள்

ஏபி டி வில்லியர்ஸ் பிறந்த நாள்

ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்களாக இருந்து வருபவர்கள் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி. ஏபி டி வில்லியர்ஸ் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர் சில பெங்களூரு அணி ரசிகர்கள்.

பால் அபிஷேகம்

கோலி, டி வில்லியர்ஸ் இரண்டு வீரர்களும் இருக்கும் பேனர் ஒன்றை தயார் செய்து அதற்கு பால் அபிஷேகம் செய்து சினிமா ஹீரோக்கள் போல தங்கள் அணியின் கிரிக்கெட் நட்சத்திரங்களை கொண்டாடினர்.

கோப்பை வென்றதில்லை

கோப்பை வென்றதில்லை

பெங்களூரு அணியின் ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவாக இருந்து தங்கள் அணியின் இரட்டை நட்சத்திரங்களை கொண்டாடினாலும், அந்த அணி இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றதில்லை என்ற குறை தொடர்ந்து உள்ளது.

பலமான அணி

பலமான அணி

கடந்த ஐபிஎல் தொடர் துவங்கும் முன் பெங்களூரு அணி தான் தொடரை வெல்லும் என கூறப்பட்டது. காரணம், அந்த அணியின் கேப்டன் கோலி, நட்சத்திர அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் மற்றும் சமநிலை கொண்ட அணி.

பல்வேறு மாற்றங்கள்

பல்வேறு மாற்றங்கள்

ஆனால், தொடரின் முடிவில் அந்த அணி பிளே-ஆப் கூட செல்ல முடியாத நிலையில் தான் இருந்தது. இதற்கு என்ன காரணம் என தெரியாத நிலையில், இந்த முறை கோப்பை வெல்ல அந்த அணி பயிற்சியாளர் முதல் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளது.

கோப்பை வென்று கொடுப்பாரா?

கோப்பை வென்று கொடுப்பாரா?

பால் அபிஷேகம் செய்யும் அளவுக்கு பெங்களூரு ரசிகர்கள் இருப்பது, கோப்பை வெல்லாவிட்டாலும், அவர்கள் அந்த அணியை கைவிட்டு விடவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்களுக்காக கேப்டன் கோலி இந்த முறை கோப்பை வென்று கொடுப்பாரா?

Story first published: Monday, February 18, 2019, 18:09 [IST]
Other articles published on Feb 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+