Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12 பாலில் 34 ரன்கள் தேவை.. 8 பந்தில் முடிவை மாற்றிய தினேஷ் கார்த்திக்.. திக் திக் ஓவர்கள்!

Recommended Video

தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்தியா த்ரில் வெற்றி | Ind vs Ban

சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் நிதாஸ் கோப்பையை வென்று இருக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் ஆரம்பத்திலேயே சொதப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் சுதாரித்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய இந்தியாவின் தொடக்கம் மோசமாக இருந்தது. ரோஹித் 56 ரன் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 167 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி அடைந்தது. தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் ஆட்டத்தையே மாற்றி இருக்கிறார்.

தினேஷ் வந்தார்

தினேஷ் வந்தார்

தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கும் போது, இந்தியா 133 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. 12 பாலில் 34 ரன்கள் தேவை. எதிரே இருக்கும் விஜய் சங்கர் சொதப்பிக் கொண்டு இருந்த நேரம். மொத்த அழுத்தமும் தனியாளாக இவர் மீது மட்டும்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 17 ரன்கள் தேவை.

அதிரடி

அதிரடி

ஆனால் தினேஷ் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு விக்கெட் எடுத்த டெட் ஓவர் பந்து வீச்சாளர் ருபேல் போட்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். சிக்ஸ் அடித்த அதே திசையில் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் அதோடு விடவில்லை. அடுத்த பந்தையும் சிக்ஸுக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் ரன் அடிக்காமல், அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன் எடுத்தார்.

த்ரில் ஓவர்

த்ரில் ஓவர்

19வது ஓவரின் கடைசி பந்தில் உடலை திருப்பி, ரிவர்ஸ் ஷாட் அடித்து பந்தை மீண்டும் சிக்ஸுக்கு பறக்கவிட்டார் தினேஷ் கார்த்திக். ஆனால் கடைசி ஓவர் விஜய் சங்கருக்கு கிடைத்தது. ஆல்ரவுண்டர் சௌமியா போட்ட அந்த ஓவரின் முதல் பந்து வைட் பந்தாக சென்றது. அதற்கு அடுத்த பந்தை வீணாக்கினார் விஜய். அதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு ஸ்டிரைக் கொடுத்தார்.

பவுண்டரி

பவுண்டரி

4 பந்தில் 10 ரன் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடித்துவிட்டு ஓடினார். 3 பந்தில் 9 ரன் தேவைப்பட்ட போது விஜய் சங்கர் பவுண்டரி அடித்தார். 2 பந்தில் 5 ரன் தேவைப்பட்ட சமயத்தில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து, மோசமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

ஆனால் அதற்குள் தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக் எண்டிற்கு சென்றுவிட்டார். கடைசி ஒரு பந்து ஐந்து ரன் அடிக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் பேட்டிங். மொத்த அழுத்தமும் அவர் மீது. சௌமியா போட்ட கொஞ்சம் அகலமான பந்தை பேட்டில் வாங்கியதும் தினேஷ் முகத்தில் சிரிப்பு, பந்தை அப்படியே வளைத்து சிக்ஸுக்கு பறக்கவிட்டார்.

அசத்தல்

அசத்தல்

நேற்றைய கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

Story first published: Monday, March 19, 2018, 10:34 [IST]
Other articles published on Mar 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+