Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டீ ஆத்தும்" சென்னை சூப்பர் "ராஜாக்கள்".. ஒரு கலகல போட்டி!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு புதிதாக ஒரு வேலை கிடைத்துள்ளது. அதாவது டீ ஆத்தும் வேலைதான் அது. ஆனால் இது டீக்கடையில் நடந்தததல்ல.. ஜாலியான ஒரு போட்டிக்காக டீ ஆற்றியுள்ளனர் நமது வீரர்கள்.

ஐபிஎல் போட்டிகளை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆனால் இந்த டீ ஆத்தும் காட்சி செமையாக இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சென்னை நகரின் 375வது பிறந்த நாளையொட்டி நடத்திய ஜாலியான போட்டிதான் இது. இது அந்த அணியின் வீரர்களுக்காக நடத்தப்பட்டது. அதன் வீடியோ காட்சியை தனது பேஸ்புக் பக்கத்திலும், இணையதளப் பக்கத்திலும் அது வெளியிட்டுள்ளது.

சூப்பர் காபி சேலஞ்ச்

சூப்பர் காபி சேலஞ்ச்

இந்தப் போட்டிக்கு #SuperKaapiChallenge என்று பெயர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இப்படி ஆத்த முடியுமா

இப்படி ஆத்த முடியுமா

இதற்காக ஒரு வீடியோ கிளிப்பிங், வீரர்களுக்குக் காட்டப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த காட்சி இதுதான்.. அதாவது சென்னை நகர டீக்கடை ஒன்றில், டீக்கடைக்காரர் கிளாஸில் டீ ஆற்றும் காட்சி அது. அதாவது மேலே இருந்து கீழே உள்ள கண்ணாடி கிளாஸில் டீயை சிந்தாமல் சிதறாமல் அவர் ஸ்டைலாக ஊற்றும் காட்சி அது.

வாய் பிளந்த வீரர்கள்

வாய் பிளந்த வீரர்கள்

அந்தக் காட்சியைப் பார்த்து வீரர்கள், குறிப்பாக சென்னை அணியில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அரண்டு போய் விட்டனர். முடியவே முடியாது, சான்ஸே இல்லை, அய்யோ என்பதுதான் அவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள்.

களத்தில் குதித்த வீரர்கள்

களத்தில் குதித்த வீரர்கள்

அதேசமயம், இதை செய்து பார்க்க பெரும்பாலான வீரர்கள் முன்வந்தனர். முயற்சியிலும் குதித்தனர். பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஈஷ்வர் பாண்டே உள்ளிட்ட பல வீரர்கள் டீ ஆத்தும் சவாலில் குதித்தனர் - சுரேஷ் ரெய்னா லுங்கி கட்டிக் கொண்டு நேட்டிவிட்டியுடன் களத்தில் குதித்தது சுவாரஸ்யமானது.

பாதி கிளாஸில்.. பாதி தரையில்

பாதி கிளாஸில்.. பாதி தரையில்

மெக்கல்லம், வேயன் பிராவோ, ஆசிஷ் நேஹ்ரா, மோஹித் சர்மா, மிதுன் மன்ஹாஸ் உள்ளிட்டோர் டீ ஆத்திய ஸ்டைல் செம காமெடியாக இருந்தது. பாதி கிளாஸிலும், மீதி தரையிலுமாக விளையாடினர் வீரர்கள்.

டோணி என்ன செய்தார்....!

டோணி என்ன செய்தார்....!

இந்த டீ ஆத்தும் சவாலில் கேப்டன் டோணியும் பங்கு பெற்றாரா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவரும் டீ ஆத்தியிருப்பார் என்று நம்பப்படுகிறது.

நீங்களும் இதைப் பார்த்து ரசியுங்கள்...!

#SuperKaapiChallenge

Story first published: Sunday, September 21, 2014, 14:28 [IST]
Other articles published on Sep 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+