ஆஸி.யை செமி பைனலில் வீழ்த்தனுமா.. நான் சொல்றத கேளுங்க.. இந்தியாவுக்கு பாக். கேப்டன் டிப்ஸ்!
அடிலெய்டு: அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எளிதில் வீழ்த்த, இந்திய அணிக்கு ஒரு ஆலோசனையை கூறியுள்ளார், பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.
அடிலெய்டில் நேற்று நடந்த, உலக கோப்பை காலிறுதி போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த போட்டியோடு, பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

ஸ்பின்னர்களின் சொர்க்கபுரி
இந்நிலையில், மிஸ்பா அளித்த பேட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ள அரையிறுதி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் சுழற்பந்துக்கு சாதகமான மைதானமாகும்.

இலங்கையே தடுமாறியது
இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும், டுமினி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதே மைதானத்தில்தான்.

ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம்
ஆஸ்திரேலியா, எப்போதுமே சுழற்பந்து வீச்சில் திணறும் ஒரு அணியாகும். எனவே, ஸ்பின் ஆயுதத்தால், ஆஸ்திரேலியாவை, இந்தியா கட்டுப்படுத்த முடியும்.

சபாஷ், சரியான போட்டி
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே, சிறப்பாக விளையாடி வருவதால், அரையிறுதி மிகவும் கடுமையானதாக இருக்கும். இவ்வாறு மிஸ்பா கூறினார்.

அசந்தால் ஆபத்து
சிட்னி மைதானம், ஸ்பின்னுக்கு கை கொடுப்பதை போலவே, பேட்ஸ்மேன்களுக்கும் சொர்க்கபுரியாக விளங்குகிறது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 376 ரன்களை குவித்ததும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 406 ரன்களை அடித்ததும், இதே மைதானத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications