Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ரெடி..! என்னை கோச்சாக்குங்க.. கிரிக்கெட் வாரியத்துக்கு அப்ளிகேஷன் போட்ட பாகிஸ்தானின் தோனி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. அதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார்.

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, டி 20 தரவரிசையில் முதலிடம் என நன்றாகவே ஆடினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக படுத்தே விட்டது. எனவே தற்போதைய பயிற்சியாளர் குழுவை மாற்றுவது என்பதில் உறுதியாக இருந்தது கிரிக்கெட் வாரியம். அதனால் தான் மிக்கி ஆர்தர் பதவி நீட்டிப்பு கோரியும் அதை ஏற்க மறுத்தது.

விண்ணப்பிக்க கெடு

விண்ணப்பிக்க கெடு

தொடர்ந்து, புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. விண்ணப்பம் பெறுவதற்கான நாளும் முடிந்துவிட்டது.

பதவி ராஜினாமா

பதவி ராஜினாமா

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கிய மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்காக வகித்து வந்த கிரிக்கெட் கமிட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

களத்தில் யார்? யார்?

களத்தில் யார்? யார்?

ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் குர்ட்னி வால்ஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

அதிக சான்ஸ்

அதிக சான்ஸ்

விண்ணப்பிக்கும் கால கெடு முடிந்துவிட்டதால், மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக் தற்போது அந்நாட்டு கிரிக்கெட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்.

போராடும் குணம்

போராடும் குணம்

அவரது காலத்தில் ஆடிய போது பாகிஸ்தானின் தோனி என்று அழைக்கப்பட்டவர் அவர். அந்தளவுக்கு திறமையான வீரராக புகழப்பட்டவர். பாகிஸ்தான் பல போட்டிகளில் களத்தில் இறுதி வரை நின்று, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர். கடைசி வரை நின்று போராடும் குணம் கொண்டவர்.

வால்ஷ் இருக்கிறாரா?

வால்ஷ் இருக்கிறாரா?

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் விண்ணப்பித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் வால்ஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

Story first published: Wednesday, August 28, 2019, 18:21 [IST]
Other articles published on Aug 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+