எஸ் பாஸ்.. மிஸ்பாதான் உலகக் கோப்பைக்கான கேப்டன்.. பாக். கிரிக்கெட் வாரியம்
கராச்சி: 2015ல் நடைபெறப் போகும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின்போது பாகிஸ்தான் அணிக்குக் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதை கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி அறிவித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடருக்கு பாகிஸ்தான் கேப்டன் யார் என்ற குழப்பம் தீர்ந்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு வேறு கேப்டன் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மொயின் கானும் கூட அப்படியேதான் பேசி வந்தார். ஆனால் மிஸ்பாவே கேப்டனாக நீடிப்பார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரிடிக்கு மொயின் ஆதரவு
உண்மையல், மொயின் கான், அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால் அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.

மிஸ்பாவுக்கு எதிராக லாபி
மேலும் மிஸ்பாவை விரும்பாத சில வீரர்கள் அவரைத் தூக்க கடுமையாகவும் முயன்றனர். மொயின் கான் மூலமாக முயற்சித்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தியின் ஆதரவு அவருக்குக் கிடைத்ததால் மிஸ்பா தப்பியுள்ளார்.

மாற்றமே இல்லை
இதுகுறித்து நஜம் சேத்தி கூறுகையில் கேப்டனை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே சொன்னது போல மிஸ்பாவே உலகக் கோப்பைத் தொடருக்கும் கேப்டனாக நீடிப்பார்.

அது என் இஷ்டம்
கேப்டனை நியமிப்பதும் நீக்குவதும் வாரியத் தலைவரின் உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தேசிய அளவிலான அணிகளைத் தேர்வு செய்வதோடு தேர்வாளர்களின் வேலை முடிந்து விடும் என்றார் சேத்தி.


Click it and Unblock the Notifications