Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கனும்னு பிளான் செஞ்சேன்... சிராஜ்

பிரிஸ்பேன் : இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் பௌலர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்க திட்டமிட்டு தான் அதை செயல்படுத்தியதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த போட்டியில் தான் ஜஸ்பிரீத் பும்ராவை மிகவும் மிஸ் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதிப் போட்டியில் முகமது சிராஜின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த முதல் இன்னிங்சில் அவர் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சிராஜ் 5 விக்கெட்டுகள்

சிராஜ் 5 விக்கெட்டுகள்

ஷமி, பும்ரா உள்ளிட்ட பௌலர்கள காயம் காரணமாக இந்திய அணியில் இல்லாத நிலையில், அணியின் பௌலிங் அட்டாக்கை வழிநடத்திய சிராஜ், 5 விக்கெட்டுகளை இரண்டாவது இனனிங்சில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க முக்கிய காரணமாக அமைந்தார்.

திட்டமிட்டு செயல்பட்டேன்

திட்டமிட்டு செயல்பட்டேன்

இந்நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்க திட்டமிட்டு தான் செயல்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் தந்த நம்பிக்கையை வைத்து தான் இந்த தொடரில் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

வாய்ப்பை பயன்படுத்திய வீரர்கள்

வாய்ப்பை பயன்படுத்திய வீரர்கள்

இந்த போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவை தான் மிகவும் மிஸ் செய்ததாகவும் சிராஜ் கூறினார். ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவும் சிராஜ் பாராட்டு தெரிவித்தார்.

அதிகரித்த நம்பிக்கை

அதிகரித்த நம்பிக்கை

மேலும் தன்மீதும் மற்ற இளம் பௌலர்கள்மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட்டுவரும் ரஹானேவிற்கும் சிராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார். ரஹானே தனக்கு தொடர்ந்து பல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் இதன்மூலம் தனக்கு நம்பிக்கை அளித்து வருவதாகவும் சிராஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Story first published: Monday, January 18, 2021, 16:02 [IST]
Other articles published on Jan 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+