For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குஜராத்துக்கு எதிராக சொதப்பிய சிஎஸ்கே..பைனலில் தோனி படை செய்த தவறு..மோயின் அலியை பயன்படுத்தாதது ஏன்?

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு 215 ரன்களை இலக்காக குஜராத் அணி நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் பைனலில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையை குஜராத் படைத்தது.

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே ஏன் இவ்வளவு மோசமாக செயல்பட்டது என்று ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Mistakes committed by csk in bowling vs GT in ipl final 2023

இறுதிப் போட்டியில் எப்போதுமே எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும். பில்டிங்கில் ஒரு தவறை ஏதேனும் ஒரு வீரர் செய்தால் கூட ஒட்டுமொத்த அணியின் மனநிலையும் பாதிக்கப்பட்டு விடும். இதை தான் சிஎஸ்கே அணியில் தீபக்சாகர் செய்தார்.

கில் மூன்று ரன்கள் எடுத்திருக்கும் போது அவர் விட்ட கேட்ச் ஒட்டுமொத்த அணியின் உத்வேகத்தையும் குலைத்தது
இதேபோன்று முதல் இரண்டு ஓவர் வரை தான் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. அதன் பிறகு ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இல்லை.

அப்படி இருக்கும் போது பிளான் ஏ வில் இருந்து பிளான் பிக்கு செல்வதுதான் சிறந்தது. ஆனால் துஷர் தேஷ்பாண்டே தொடர்ந்து வேகமாக பந்து வீசி பேட்ஸ்மேனும் அடி வாங்கினார். ஆனால் தீபக்சாகர் தாம் வேகமாய் பந்து வீசினால் பந்து செல்கிறது என்பதை உணர்ந்து கொண்டு ஸ்லோ பந்துகளை அதிகமாக வீசி வந்தார்.

இதேபோன்று சிஎஸ்கே வீரர் மோயின் அலியை குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஓவராவது சிஎஸ்கே பயன்படுத்திருக்க வேண்டும். ஆனால் தோனி அவரை பயன்படுத்தாமல் போனதும் தவறாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி இன்று பில்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது. பில்டிங்கில் சிறுத்தை போல் நாம் செயல்பட்டு இருந்தால் குறைந்தபட்சம் ஒரு 20 முதல் 30 ரன்களை ஆவது நாம் தடுத்திருக்கலாம்.

ஆனால் சிஎஸ்கே வீரர்கள் பில்டிங்கில் எந்த முனைப்பும் காட்டாமல் நின்றார்கள். இது நாம் தான் தோற்கப் போகிறோம் எதற்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தது போல் தெரிந்தது. பேட்டிங்கில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே சிஎஸ்கேவால் இன்றைய போட்டியில் வெல்ல முடியும்.

Story first published: Monday, May 29, 2023, 21:43 [IST]
Other articles published on May 29, 2023
English summary
Mistakes committed by csk in bowling vs GT in ipl final 2023 குஜராத்துக்கு எதிராக சொதப்பிய சிஎஸ்கே.. பைனலில் தோனி படை செய்த தவறு..மோயின் அலியை பயன்படுத்தாது ஏன்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+