
பலம் அதிகரிப்பு
எனினும் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.அந்த அணியின் அதிரடி வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் தனது முழு உடல் தகுதியும் எட்டி இருக்கிறார். இதேபோன்று ஆல்ரவுண்டர் கேமரான் கிரீனும் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் பலம் அதிகரித்துள்ளது.

நெருக்கடி
பொதுவாக இந்திய ஆடுகளங்களில் பந்து பழையதாக மாறினால் ரிவர்ஸ் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்கலாம். எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த யுத்தியை செய்ய முடியாமல் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை தவிர்த்தனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் பயிற்சியில் ரிவர்ஸ் இன் பந்தை தொடர்ந்து வீசி அசத்தினார்.வலைப்பயிற்சியின் போது ரிவர்ஸ் ஸ்விங் பந்தை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை அவர் தொடர்ந்து போல்ட் ஆக்கி கதி தள்ளப்பட்டுள்ளனர்.

அணியில் மாற்றம்
இதை பார்த்ததும் ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர் இதனால் மூன்றாவது டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் ரிவர்ஸ் ஸ்விங் பந்தை பயன்படுத்தி இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க உள்ளார். இதனை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வார்னர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில் ட்ராவிஸ் ஹெட் அந்த இடத்தில் விளையாட உள்ளார்.இதனால் நடு வரிசையில் ட்ராவிஸ் ஹெட்க்கு பதில் ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன் களமிறங்க உள்ளார்.

ஆடுகளம்
இதன் மூலம் ஆஸ்திரேலியா இரண்டு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட உள்ளது. இன்னும் தற்போது இந்தூர் ஆடுகளத்தில் பச்சை புற்கள் அமைக்கப்பட்டுள்ளது. அது போட்டி தொடங்குவதற்கு முன்பு வெட்டப்படலாம். இந்திய அணி குறைந்தபட்சம் இன்னும் ஒரு டெஸ்ட் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











