Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்!

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் உள்ளூர் போட்டி ஒன்றில் அவுட் ஆன கோபத்தில் தன் கையை மோசமாக காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் அவ்வப்போது இடம் பெற்று வருபவர் தான் மிட்செல் மார்ஷ். அணியில் நிரந்தர இடம் வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்.

அந்த முயற்சி ஒன்றில் ஏற்பட்ட தோல்வியில் தான் கடுப்பாகி கையை கடுமையாக காயப்படுத்திக் கொண்டுள்ளார் மிட்செல் மார்ஷ்.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

மிட்செல் மார்ஷ் ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். அப்போது பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும், பந்து வீச்சில் கலக்கினார். 86 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் அவர்.

ஆல் - ரவுண்டர் வாய்ப்பு

ஆல் - ரவுண்டர் வாய்ப்பு

அப்போதே தேர்வாளர்கள் கண்ணை ஈர்த்து விட்டாலும், தான் ஆல் - ரவுண்டராக இருந்தால் அணியில் எளிதாக இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கவனமாக ஆடி வந்தார்.

என்ன போட்டி?

என்ன போட்டி?

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் முதல் தர தொடரான ஷெப்பீல்டு ஷீல்டு தொடரில் டாஸ்மானியா - வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா இடையே ஆன போட்டி நடைபெற்றது. அதில் வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் ஆடி வந்தார்.

அரைசதம் அடித்தார்

அரைசதம் அடித்தார்

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 41 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் அரைசதமும் அடித்து இருந்தார் மிட்செல் மார்ஷ். ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் கோபம்

கடும் கோபம்

பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடி வந்த அவர் 53 ரன்கள் எடுத்த நிலையில், பவுலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனால், கோபமாக உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார்.

குத்து விட்டார்

குத்து விட்டார்

அங்கே தன் கோபத்தை காண்பிக்க, சும்மா இருந்த சுவரின் மீது ஓங்கி குத்து விட்டுள்ளார். அதுவும் அவர் பந்து வீசும் வலது கையை வைத்து குத்தி இருக்கிறார். தான் என்ன செய்கிறோம் என்பதை அப்போது அவர் உணரவில்லை.

எலும்பு முறிவு?

எலும்பு முறிவு?

இந்த சம்பவம் நடந்த பின்னர், அவரது கை கடுமையாக காயம் அடைந்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அனேகமாக அவரது கை விரல்கள் அல்லது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெளியான அறிவிப்பு

வெளியான அறிவிப்பு

வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா அணி மிட்செல் மார்ஷ்-க்கு ஏற்பட்ட காயம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், அவர் ஆட்டமிழந்த பின்னர் உடை மாற்றும் அறையில் தன் கையை காயப்படுத்திக் கொண்டுள்ளார் என கூறி உள்ளது.

விசாரணை

விசாரணை

மேலும், காயத்தின் அளவு மற்றும் அவர் மீண்டு வரும் காலம் ஆகியவற்றை வரும் வாரத்தில் அறிந்து கொள்வோம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடர் நவம்பர் 21 முதல் துவங்க உள்ளது. அதற்குள் மிட்செல் மார்ஷ் குணமடைந்தாலும், ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. குத்து விட்டு தன் கிரிக்கெட் வாய்ப்புக்களை தகர்த்து எறிந்துள்ளார் மிட்செல் மார்ஷ்.

Story first published: Monday, October 14, 2019, 19:38 [IST]
Other articles published on Oct 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+