Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் கால் வைத்த விவகாரம்.. இந்தியாவை கலாய்த்த மிட்செல் மார்ஷ்.. திமீர் பேச்சு!

சிட்னி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகப்போகிறது. இதில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

அதன் பிறகு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஸ் உலகக்கோப்பை மீது கால் வைத்து போட்டோ எடுத்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Mitchell Marsh gives clarification abou disrespecting the icc world cup 2023

இதை அடுத்து மிச்சல் மார்ஸ் மீது உத்தர பிரதேச மாநில காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் மார்ஷ் இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மனுவும் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஊடகம் ஒன்றில் நிச்சயமாக தொடர்பு கொண்டு நெறியாளர்கள் நீங்கள் உலகக்கோப்பை மீது கால் வைத்த சம்பவம் எங்களுக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மிட்செல் மார்ஸ் தான் சமூக வலைத்தளத்தில் பார்ப்பதில்லை என்றும் ஆனால் இது இந்தியாவில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பதாக பலரும் என்னிடம் கூறினார்கள். நான் உலகக் கோப்பையை அவமதிக்கும் எண்ணத்தில் அவ்வாறு செய்யவில்லை.

இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது பற்றி நான் அதிகம் யோசிக்கக்கூட இல்லை. முகமது சமி காயமடைந்து விட்டதாக கூறியது குறித்தும் கேள்விப்பட்டேன். அப்படி ஒரு எண்ணத்தில் நான் இதை செய்யவில்லை என்று மிச்சல் மார்ஸ் கூறியுள்ளார்.அப்போது நெறியாளர் இந்த புகைப்படத்தை நீங்கள் பிரேம் போட்டு உங்கள் வீட்டில் மாற்றுவீர்களா என கேள்வி கேட்க அதற்கு நிச்சயமாக அவ்வாறு தான் செய்யப் போகிறேன் என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.

தன்னுடைய செயலுக்கு மிச்சல் மார்ஸ் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதில் எந்த தவறும் இல்லை தான் அவமதிக்கும் எண்ணத்தில் இதை செய்யவில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் இதை பிரேம் போட்டுக் கொள்வேன் என்றும் அவர் கூறி இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

Story first published: Friday, December 1, 2023, 19:14 [IST]
Other articles published on Dec 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+