Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் வெற்றியை கிண்டல் செய்த நியூசி. வீரர்..!! திருப்பி கொடுத்த ரசிகர்கள்..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து வர வர வில்லனாக மாறி வருகிறது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது

Recommended Video

ICC Test Rankings: India dethrone New Zealand to reclaim top spot | Oneindia Tamil

பிறகு, ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.

பின்னர், 2021 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இருபது ஓவர் தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றிய நிலையில், நடப்பு டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை 1க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

கிண்டல்

கிண்டல்

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அணிக்கான புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்த நிலையில், நியூசிலாந்து அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தவருமான மிட்செல் மிக்ளங்கன், இந்தியாவை கிண்டல் செய்யும் விதமாக ட்வீ ட் ஒன்றை போட்டுள்ளார். அதில், உலக சாம்பியன்களான நியூசிலாந்தை உங்கள் சொந்த மண்ணில் உங்களுக்கு ஏற்ற சூழலில் தோற்கடித்ததற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

மிட்செல் மிக்ளங்கனின் இந்த வார்த்தைகள் இந்திய ரசிகர்களை கடுப்படைய செய்தது. இதனால் இந்திய ரசிகர்களும் எதிர்வினையாற்ற தொடங்கி விட்டார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்களான நியூசிலாந்து வெறும் சொந்த மண்ணில் தான் தொடரை வென்றதாகவும், ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து கடைசியாக எப்போது இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது என்று கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதே போன்று நியூசிலாந்து அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பினர். மேலும் சிலர் மழை மட்டும் பெய்யவில்லை என்றால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணியில் ஏன் உங்களால் தொடர்ந்து இடம்பிடிக்க முடியவில்லை என்று மிட்செல் மிக்ளங்கனை இந்திய ரசிகர்கள் வறுத்து எடுத்துள்ளனர்.

Story first published: Tuesday, December 7, 2021, 15:38 [IST]
Other articles published on Dec 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+