Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கொடும சார் இது.. சூர்யகுமாருக்கே தண்ணீர் காட்டிய சாண்ட்னர்.. அதுவும் பவர் ப்ளேவில் - ஆச்சரியம்!

ராஞ்சி: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் அதிரடி நாயகன் சூர்யகுமார் யாதவுக்கே மிட்செல் சாண்ட்னர் ஒரு ஓவர் முழுக்க தண்ணீர் காட்டிய சம்பவம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டி ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

ராஞ்சி பிட்ச்-ல் இது சற்று கடினமான இலக்கு தான் ஆகும். எனினும் தைரியமாக களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 6 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். மற்றொரு ஓப்பனரான இஷான் கிஷான் தனது சொந்த ஊரில் கலக்குவார் என்று பார்த்தால் அவரும் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். இதன்பின்னர் வந்த ராகுல் திரிபாதிக்கு டக் அவுட்டே மிச்சம்.

கேப்டன்களின் இன்னிங்ஸ்

கேப்டன்களின் இன்னிங்ஸ்

இதனால் 15 ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து திணறியது. அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா - துணைக்கேப்டன் சூர்யகுமார் தான் சீரான வேகத்தில் அணியை மீட்டுக்கொண்டு வந்தனர். 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் தான் வந்திருந்த சூழலில் பவர் ப்ளேவில் ஸ்கோரை உயர்த்திவிட வேண்டும் என 5வது ஓவரில் ஹர்திக் அதிரடி காட்டினார். ஃபெர்க்யூசன் வீசிய அந்த ஓவரில்13 ரன்களை அடித்தார். ஆனால் பவர் ப்ளேவின் கடைசி ஓவரில் தான் ட்விஸ்ட் காத்திருந்தது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

கடைசி ஓவரில் எப்படியும் அதிரடி காட்டுவார்கள் என கணித்து நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரே ஓவர் வீச வந்தார். அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆகும். எப்படியும் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் மெயிடன் ஓவராக மாறியது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

முதல் பந்தை ரிவெர்ஸ் ஸ்வீப் ஆட முயன்ற போது, மிஸ்ஸாகி சுருண்டு விழுந்தார். அவுட்சைடாக வந்த 2வது பந்தை கவர் திசையில் அடித்தும் ரன் ஓட முடியவில்லை. அதற்கடுத்த 4 பந்துகளிலுமே அவுட் சைட் ஆஃப் திசையில் தான் வீசினார். பிட்ச்-ல் அதிகப்படியான டேர்ன் இருந்ததால் அதனை எப்படி அடிப்பது என்றுக்கூட யோசிக்க முடியாமல் தப்பித்தால் போதும் என தடுப்பாட்டம் மட்டுமே செய்தார்.

அடுத்த ஓவரும் சூப்பர்

அடுத்த ஓவரும் சூப்பர்

உலகில் யாராலும் சமாளிக்க முடியவில்லை என கூறப்படும் சூர்யகுமார் யாதவை எதிரே வைத்துக்கொண்டு மெயிடன் ஓவராக சாண்ட்னர் வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அது பவர் ப்ளேவின் கடைசி ஓவர் ஆகும். சாண்ட்னர் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரே ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 27, 2023, 22:54 [IST]
Other articles published on Jan 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+