Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

35 வயதில் தீப்பிழம்பை கக்கிய மிட்செல் ஸ்டார்க்.. ஒவ்வொரு பந்தும் 140+ தான்.. அரண்டு போன இங்கிலாந்து

பெர்த்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு, ஆஸ்திரேலியாவின் 35 வயது வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் தனது அதிவேகப் பந்துவீச்சால் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரது முதல் ஸ்பெல்லில் அனைத்து பந்துகளையும் 140 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசி இங்கிலாந்து அணியை திணறவைத்தார். உணவு இடைவேளைக்கு முன்பாகவே இங்கிலாந்து அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தப் போட்டியின் முதல் ஓவரை வீசிய ஸ்டார்க், அந்த ஓவரின் கடைசிப் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை (0) பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவதை 24-வது முறையாக நிகழ்த்தி ஸ்டார்க் சாதனை படைத்தார்.

Mitchell Starc bowling in Ashes 2025 Routs England with 145 KMPH Pace Joe Root Ducks for 100th Ashes Wicket

தனது 35-வது வயதிலும், ஸ்டார்க் வீசிய முதல் 6 ஓவர்களில் ஒவ்வொரு பந்தும் 140 கி.மீ வேகத்திற்கு மேல் பதிவானது கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 145 கி.மீ வேகத்தில் அவர் வீசிய பந்துகள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காட வைத்தன. அவரது அபாரமான வேகமும், துல்லியமும் இங்கிலாந்தின் டாப்-ஆர்டரைச் சுருட்டியது.

தனது வேகத்தால் பென் டக்கெட்டை (21) வெளியேற்றிய ஸ்டார்க், இங்கிலாந்தின் பேட்டிங் தூணாகக் கருதப்படும் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டை டக் அவுட்டில் (0) வெளியேற்றிப் பேரதிர்ச்சி அளித்தார். லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து ரூட் வெளியேறியபோது, பெர்த் மைதானமே அதிர்ந்தது.

இது, ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் 100-வது விக்கெட்டாகும். இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.

ஆலி போப் 46 ரன் சேர்த்தார். அவர் நிதானமாக ஆடி அணியை மீட்க முயன்றாலும், கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் தனி ஆளாக இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினார். ஸ்டார்க்கின் இந்த அசாத்தியப் பந்துவீச்சால், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்தின் முடிவு தவறானதாக மாறியது.

Story first published: Friday, November 21, 2025, 11:10 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+