Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.138 கோடியில் வீடு.. இந்திய வீரர்களே வியந்து பார்க்கும் மிட்சல் ஸ்டார்க்கின் சொத்து மதிப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மிட்சல் ஸ்டார்க்கின் சொத்து மதிப்பு ரூ.208 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள மிட்சல் ஸ்டார்க், ஏராளமான கார் வகைகளையும் வைத்துள்ளார். கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள் மூலமாக பெற்ற வருவாயை அதிகளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருக்கிறார்.

அண்மையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரில் 2024 மெகா ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க், அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். 35 வயதாகும் மிட்சல் ஸ்டார்க், 65 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

Mitchell Starc Net Worth 2025

2021ல் ஆஸ்திரேலியா அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். ஆஸ்திரேலியாவில் மிட்சல் ஸ்டார்க் நட்சத்திர வீரர் மட்டுமல்லாமல் செல்வந்தராகவும் இருந்து வருகிறார். மிட்சல் ஸ்டார்க்கின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.208 கோடியாகும். கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமாக அதிக வருவாய் ஈட்டி வருகிறார். அதில் கிடைக்கும் பணத்தை அதிகளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள டெர்ரே ஹில்ஸ் உள்ள ஒரு வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.138 கோடியாகும். 2023ஆம் ஆண்டு ரூ.46 கோடி மதிப்பிலான வீட்டை விற்பனை செய்துவிட்டு, இந்த வீட்டிற்கு மாறினார். அதேபோல் மிட்சல் ஸ்டார்க் மிகப்பெரிய கார் பிரியர். லம்போர்கினி, ஜாகுவார். அவ்டி, மெர்சிசஸ்ட் பென்ஸ் ஜி கிளாஸ் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார்.

அதேபோல் விலை உயர்ந்த வார்ச்களை மிட்சல் ஸ்டார்க் விரும்பி அணிபவர். மிட்சல் ஸ்டார்க்கின் மனைவி அலைசா ஹேலியும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை. ஒரே நேரத்தில் இருவரும் உச்சத்தில் இருந்த தம்பதிகள் என்பதால், ஆஸ்திரேலியா விளம்பரத் துறையில் ஸ்டார்க் - ஹேலி தம்பதி கொடிகட்டி பறந்தது என்று சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் ரிக்கி பாண்டிங், ஷேன் வார்னே ஆகியோருக்கு பின் பணக்கார கிரிக்கெட் வீரராக மிட்சல் ஸ்டார்க் இருந்து வருகிறார். ரிக்கி பாண்டிங்கின் சொத்து மதிப்பு ரூ.525 கோடியாக கணிக்கிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாடியதோடு மட்டுமல்லாமல், பயிற்சியாளராகவும் ரிக்கி பாண்டிங் மிகப்பெரிய தொகையை வருமானமாக பெற்று வருகிறார். வரும் காலத்தில் மிட்சல் ஸ்டார்க்கும் பயிற்சியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 3, 2025, 20:44 [IST]
Other articles published on Sep 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+