Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில் தேவின் பிரம்மாண்ட டெஸ்ட் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்.. வங்கதேச டெஸ்டில் அசத்தல்

டாக்கா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் அதிக விக்கெட் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் ஆடியது. அப்போது வங்கதேச வீரர் லிட்டன் தாசை ரன் எதுவும் எடுக்கவிடாமல் ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டார்க்கின் 435வது விக்கெட்டாக அமைந்தது.

Mitchell Starc surpasses Kapil Dev s most Test Wickets record with 435 wickets in AUS vs BAN 1st Test

இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த இந்திய ஜாம்பவான் கபில்தேவை அவர் பின்னுக்குத் தள்ளினார். தற்போது டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஸ்டார்க் 11வது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக, இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே ஸ்டார்க் மற்றொரு உலக சாதனையை நிகழ்த்தினார். வங்கதேச தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாத்தை அவுட்டாக்கியபோது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற மாபெரும் பெருமையை பெற்றார். இடது கை பந்துவீச்சாளர்களான இலங்கையின் ரங்கனா ஹெராத் (433 விக்கெட்டுகள்) மற்றும் பாகிஸ்தானின் வசீம் அக்ரம் (414 விக்கெட்டுகள்) ஆகியோரின் சாதனைகளை ஸ்டார்க் தகர்த்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலுக்குள் நுழைய ஸ்டார்க்கிற்கு இன்னும் வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. 10வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை தன்வசம் வைத்துள்ளார்.

விவிஎஸ் லட்சுமணுக்கு புதிய பதவி.. 2027 உலகக்கோப்பைக்கு முன் பிசிசிஐ அதிரடி மாற்றம் செய்ய முடிவு

விவிஎஸ் லட்சுமணுக்கு புதிய பதவி.. 2027 உலகக்கோப்பைக்கு முன் பிசிசிஐ அதிரடி மாற்றம் செய்ய முடிவு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்திய ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 537 விக்கெட்டுகளுடனும் இந்த வரலாற்றுப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

Story first published: Friday, August 14, 2026, 13:42 [IST]
Other articles published on Aug 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+