Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுயசரிதை எழுதுகிறார் மிதாலி

டெல்லி: மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. அதைத் தொடர்ந்து புத்தகமாகவும் அது உருவாகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 34 வாழ்க்கை அடிப்படையாக கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ள நிலையில், தனது வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதுகிறார். அடுத்த ஆண்டு இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை பைனலுக்கு இந்தியாவை அழைத்துச் சென்று, மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

சாதனை தமிழச்சி

சாதனை தமிழச்சி

34 வயதாகும் தமிழை தாய்மொழியாக கொண்ட மிதாலி ராஜ், ஒருதினப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.

மிதாலி சினிமா

மிதாலி சினிமா

மிதாலி 186 போட்டிகளில் 6,190 ரன்கள் எடுத்துள்ளார். அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ள மிதாலி ராஜ் குறித்த சினிமா தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்து புத்தகம்

அடுத்து புத்தகம்

இந்த நிலையில், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை மிதாலி ராஜ் எழுதி வருகிறார். அடுத்த ஆண்டு இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென்குவின் நிறுவனம் இதை வெளியிட உள்ளது.

பென்குவின் படைப்பு

பென்குவின் படைப்பு

`கடின உழைப்பு, முழு திறமயை வெளிப்படுத்துவது என்று பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மிதாலி உள்ளார். அவருடைய சுயசரிதை பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும்' என்று பென்குவின் நிறுவனம் கூறியுள்ளது.

Story first published: Friday, October 6, 2017, 12:09 [IST]
Other articles published on Oct 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+