Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு போட்டோவுக்கு அக்கப்போரா? நெட்டிசன்களிடம் சிக்கி திணறும் மித்தாலி!

டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட போட்டோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

34 வயதாகும் மித்தாலிராஜ், சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

தொடர்ச்சியாக அரை சதங்கள் விளாசி புது சாதனையையும் மித்தாலி ராஜ் படைத்திரு்நதார். இதனால் தேசிய அளவில் புகழ் பெற்றார் மித்தாலி ராஜ்.

புகைப்படம்

இந்த நிலையில், சமீபத்தில் டிவிட்டரில் அவர் தனது தோழிகளோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அந்த போட்டோவில் பனியன் போன்ற மேலாடை அணிந்திருந்தார் மித்தாலி. இந்த ஆடையில் அவரது மேல் அங்கங்கள் வெளியே தெரிந்தன. இதை பார்த்ததும் நெட்டிசன்களில் ஒரு பிரிவினர் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

மித்தாலியிடம் இதை எதிர்பார்க்கவில்லை. போட்டி நேரத்தில் புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ள உங்களை பற்றி உயர்வாக மதிப்பீடு செய்திருந்தோம். இப்படி உடலை காண்பித்தபடி போட்டோ வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்து களேபரம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

கங்குலி சட்டையை கழற்றினாரே

ஆணோ, பெண்ணோ, தாதா கங்குலியிடமிருந்துதான் இந்த ஐடியாவை பெற்றிருக்க வேண்டும் என்று கலாய்க்கிறது இந்த டிவிட். கங்குலி, இங்கிலாந்து தொடர் ஒன்றில் சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடியிருந்தார்.

கோஹ்லி சட்டையை கழற்றுகிறாரே

விராட் கோஹ்லி ஆடையை குறைக்கலாம். ஆனால் மித்தாலி செய்ய கூடாதா? அவர் பெண் என்பதால்தான் இந்த கட்டுப்பாடா? பிற நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் இதைவிட அதிகமாக ஆடை குறைத்துள்ளனர் என்று கூறுகிறார் இந்த பெண்.

இருவரும் ஒன்றா?

நல்ல நகைச்சுவை. பெண்களும், ஆண்களும் ஒரே மாதிரியான உடல் அமைப்பை கொண்டுள்ளதாக நினைக்கிறீர்களா? நீங்கள் கண் மருத்துவரை சந்திப்பது நல்லது என்றது இந்த டிவிட்.

ஆண்-பெண் யுத்தம்

நெட்டிசன்களில் வட இந்தியாவை சேர்ந்த பல பெண்கள் கமெண்ட் செய்துள்ளனர். அவர்கள் மித்தாலிக்கு ஆதரவாகவும், ஆண்களில் பெரும்பாலானோர் இது தவறு என்றும் டிவிட் செய்துள்ளனர். இதனால் இந்த போட்டோவுக்கு பல ஆயிரம் கமெண்ட்டுகள் குவிந்துளள்ளன.

Story first published: Friday, September 8, 2017, 13:36 [IST]
Other articles published on Sep 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+