Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ நாங்களும் தென்னாப்பிரிக்காவுக்கு வரோம்…. மிதாலி தலைமையிலான அணி அறிவிப்பு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சென்றுள்ள நிலையில், மகளிர் கிரிக்கெட் அணியும், தென்னாப்பிரிக்காவில் விளையாட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 6 ஒருதினப்போட்டி, 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அடுத்த டெஸ்ட் நாளை துவங்க உள்ளது.

Mithali to lead team to SA


இந்த நிலையில், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக, இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்கிறது. பிப்ரவரி 5 முதல் 7ம் தேதி வரை நடக்கும் மூன்று ஒருதினப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுடன் மோத உள்ளது.

அதைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் பைனலுக்கு அணியை எடுத்துச் சென்ற, மிதாலி ராஜ் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த, 17 வயதாகும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சவுராஷ்டிராவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், 163 பந்துகளில், 24 பவுண்டரிகளுடன், 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜெமிமா.

தற்போதைய அணியில் மிகவும் வயதில் குறைவானவர் ஜெமிமா. 35 வயதாகும் கேப்டன் மிதாலி ராஜ், 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கியவர்.

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி விவரம்:

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்(, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஸ்த், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ், பூனம் ராவத், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜூலான் கோஸ்வாமி, தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, மோனா மேஷ்ரம், பூஜா வஸ்தரகார், வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாதியா (விக்கெட் கீப்பர்)
Story first published: Monday, March 29, 2021, 13:25 [IST]
Other articles published on Mar 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+