For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிதாலி ராஜ் ஓய்வு.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பல்வேறு முக்கிய சாதனைகளை படைத்து அசத்தியவர் மிதாலி ராஜ்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

 மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

சர்வதேச மகளிர் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற பெருமை மிதாலி ராஜ்-ஐ தான் சேரும். இதுவரை இந்தியாவுக்காக 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,805 ரன்களை குவித்துள்ளார். அவரின் சாராசரி மட்டும் 50.68 ரன்கள் ஆகும். இப்படிபட்ட ஜாம்பவான் இன்று ஓய்வை அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு

ட்விட்டர் பதிவு

இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அனைத்து பயணங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அந்தவகையில் இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நாளாகும் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஆதரவுக்கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகள். என் வாழ்க்கையின் 2வது இன்னிங்ஸை ஆட உங்களது ஆசிர்வாதம் வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.

சாதனைகள் என்னென்ன

சாதனைகள் என்னென்ன

39 வயதாகும் மிதாலி ராஜ் இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் 7,805 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 89 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 8 போட்டிகளில் ஆடியுள்ள மிதாலி ராஜ் 12 போட்டிகளில் 699 ரன்களை குவித்துள்ளார்.

2வது இன்னிங்ஸ் என்ன

2வது இன்னிங்ஸ் என்ன

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளார். மிதாலி ராஜ் இதுவரை திருமணமே செய்துக்கொள்ளவில்லை. எனவே அடுத்ததாக அவரின் திருமணம் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, June 8, 2022, 14:53 [IST]
Other articles published on Jun 8, 2022
English summary
Mithali Raj Retirement ( மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு ) இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+