For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆண்களுக்கு இணையான சம்பளம்? எல்லாம் வரும் போது வரும்.. செம பதில் சொன்ன மிதாலி ராஜ்!!

மும்பை : மகளிர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து சாதனைகள் புரிந்து வருகிறது.

இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட்டை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்ற ஐபிஎல் தொடர் போல, மகளிர் ஐபிஎல் தொடரை உருவாக்க பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. அதற்கான முன்னோட்டமாக மூன்று மகளிர் அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்ச் என்ற நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு இடையே உள்ள நாட்களில் நடைபெற உள்ளது.

Mithali Raj explains Why Women cricketers are not earning like men

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு, ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக, அதில் எந்த தவறும் இல்லை என கூறினார்.

மிதாலி கூறுகையில், முன்பு இருந்ததை விட மகளிர் கிரிக்கெட் இப்போது தொழில்முறையில் செல்கிறது. எங்களுக்கு ஒப்பந்தம் போடுகிறார்கள். நாங்கள் ஆண்கள் அளவுக்கு தொடர்ந்து போட்டிகளில் ஆடுவதில்லை. அவர்களைவிட குறைந்த போட்டிகளிலேயே விளையாடுகிறோம் என்றார்.

மேலும், ஆடவர் கிரிக்கெட் இன்று இருக்கும் நிலையை அடைய பல வருடங்கள் எடுத்துக் கொண்டது. அதே நிலையில் தான் இப்போது மகளிர் கிரிக்கெட்டும் இருக்கிறது என்றார்.

அதிக மக்கள் மகளிர் கிரிக்கெட்டை பார்க்க வரும் போது, மைதானத்தில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது தான் நிறைய வருமானம் ஈட்ட முடியும். அதுவரை பிசிசிஐ சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்றார் மிதாலி ராஜ்.

மிதாலி ராஜ் பேச்சு நியாயமானதாகவே உள்ளது. வருமானம் ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக வரும் போது, தங்கள் வருமானமும் உயரும் என தெளிவாக கூறினார். இங்கே விளையாட்டு, பெரும்பாலும் வியாபாரமாகிவிட்டது என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார் இந்த அனுபவ வீராங்கனை.

Story first published: Monday, May 6, 2019, 16:13 [IST]
Other articles published on May 6, 2019
English summary
Mithali Raj explains Why Women cricketers are not earning like men
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+