Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என் பயணம் இதோடு முடியவில்லை”.. மிதாலி ராஜ்-ன் ஓய்வு அறிவிப்பு.. ட்விட்டரில் உருக்கமான பதிவு!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து உருக்கமான குறிப்பை மிதாலி ராஜ் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

இந்திய வீராங்கனை MithaliRaj சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு | *Cricket

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய தூணாக விளங்கி வந்தவர் கேப்டன் மிதாலி ராஜ்

இவர் இன்று அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய பெருமையும், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் மிதாலி ராஜ்-யிடம் இருந்து வருகிறது. 39 வயதிலும் அதே உத்வேகத்துடன் ஆடி வந்த இவர், இன்று ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து உருக்கமான பதிவையும் போட்டுள்ளார்.

உருக்கமான அறிக்கை

உருக்கமான அறிக்கை

அதில், அனைத்து பயணங்களை போன்றே, எனது கிரிக்கெட் பயணமும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். அந்த வகையில் இன்று தான் அந்த நாள். ஒவ்வொரு முறை நான் களத்தில் அடியெடுத்து வைக்கும் போதும், இந்தியாவுக்கு எப்படியாவது வெற்றி பெற்று தர வேண்டும் என மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பெருமையாக கருதியுள்ளேன்.

 எதிர்காலம் என்ன?

எதிர்காலம் என்ன?

இந்த சமயம் தான் நான் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கான சரியான நேரமாக பார்க்கிறேன். எனக்கு பிறகு திறமைவாய்ந்த இளம் வீராங்கனைகள் இருப்பதால், இந்திய அணியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே உள்ளது. அந்த நம்பிக்கையுடன் செல்கிறேன்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு ஸ்பெஷல் நன்றியை கூற வேண்டும். ஏனென்றால் ஒரு வீராங்கனையாகவும், ஒரு கேப்டனாகவும் என்னை அங்கீகரித்தார். ஒரு கேப்டனாக இந்திய மகளிர் அணியை சிறப்பாக செதுக்கியுள்ளேன் என நினைக்கிறேன். அந்த பொறுப்புகள் என்னையும் மாற்றியுள்ளன.

புது பயணம்

புது பயணம்

எனது பயணம் முடிந்த போதும் கிரிக்கெட் மீதான என் காதல் எப்போதும் குறையாது. மகளிர் கிரிக்கெட்டிற்காக தொடர்ந்து என்னால் முடிந்த பணிகளை செய்துக்கொண்டே தான் இருப்பேன். எனக்கு ஆதரவுக் கொடுத்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி எனக் கூறி மிதாலி ராஜ் விடைப்பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, June 8, 2022, 17:52 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+