Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலது கன்னத்தில் முத்தம்.. தலையில் ஒரு தட்டு.. எப்படி மாட்டிட்டிருக்காங்க பாருங்க மித்தாலி ராஜ்

ஹைதராபாத்: உலக சிரிப்பு தினத்தையொட்டி நேற்று மித்தாலி ராஜ் ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் போட்டுள்ளார். அதைப் பார்த்து பலரும் எப்படிங்க இப்படி என்று வியந்து கேட்டுள்ளனர்.

நேற்று உலகம் முழுவதும் சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இப்போது இருக்கும் கொரோனா சோகத்தில் மக்களுக்கு வாய் விட்டு சிரிக்க நேற்று ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. எப்பப் பார்த்தாலும் சோகமும் பயமுமாக இருக்கும் மக்களுக்கு இந்த நாளிலாவது சற்று ரிலாக்ஸ் கிடைத்திருக்கும் என்று நம்பலாம்.

இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜும் தனது பங்குக்கு ஒரு அருமையான புகைப்படத்தை டிவிட்டரில் போட்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்தார். அதற்கு வெற்றியும் கிடைத்தது.

மித்தாலி ராஜுடன் குரங்குகள்

மித்தாலி ராஜுடன் குரங்குகள்

மித்தாலி ராஜின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று இடம் பெற்ற அந்தப் புகைப்படம் பார்த்ததுமே அடடா என்று சிரிக்க வைத்து விட்டது. அதாவது இரண்டு மனித குரங்குகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார் மித்தாலி. எந்த ஊர், எந்த ஜூ என்று தெரியவில்லை. அதில் மித்தாலியின் வலது பக்கம் உள்ள குரங்கு, அழகாக மித்தாலியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது. இடது பக்க குரங்கு, மித்தாலி தலையில் தட்டித் தடவிக் கொடுக்கிறது.

உங்க கிட்ட மாட்டிக்கிட்டேனே

உங்க கிட்ட மாட்டிக்கிட்டேனே

அடப் பாவிகளா உங்க கிட்ட வந்து இப்படி மாட்டிக்கிட்டேனே என்று சொல்லும் வகையில் வெட்கம் கலந்த சிரிப்புடன் நடுவில் அமர்ந்திருக்கிறார் மித்தாலி ராஜ். பார்க்கவே படு ஜோராக இருக்கிறது இந்த போட்டோ. அவர் பயந்து போய் உட்கார்ந்திருக்கிறாரா அல்லது ஜாலியாக இருக்கிறாரா என்றே தெரியாத அளவுக்கு மித்தாலியின் பாடி லாங்குவேஜ் இருக்கிறது.

பயம் இல்லையா

பயம் இல்லையா

இந்த போட்டோவுக்கு கமெண்டுகள் குவிந்துள்ளன. எப்படிங்க இப்படி உட்கார்ந்திருக்கீங்க. பயமே இல்லையா என்று பலரும் கேட்டுள்ளனர். ஆனால் இந்த மனித குரங்குகள் காட்டும் பாசத்தைப் பார்த்தால் பயமே தேவையில்லை என்றுதான் தெரிகிறது. மனிதர்களிடம் கூட இப்படி ஒரு இயல்பான பாசத்தை இப்போது பார்க்க முடிவதில்லை. அந்த வகையில் இந்த குரங்குப் பிடி அச்சுறுத்தாத அளவில்தான் உள்ளது.

மனசு லேசாகட்டும்

மனசு லேசாகட்டும்

இன்னொருத்தர் இப்படி கவிதை பாடியிருக்கிறார். சிறப்பு மிகச்சிறப்பு. அழகு பேரழகு . சிரிப்பு பொன் சிரிப்பு . ஜோடி நல்ல ஜோடி ...... ஹிஹிஹி என்று அவர் கூறியிருக்கிறார். அவர் அழகு என்று கூறியிருப்பது யாரை என்று தெரியவில்லை.. எல்லோரையும் சேர்த்துத்தானா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையிலேயே அந்த குரங்குகளும் சரி ,மித்தாலியும் சரி படு சூப்பராக இருக்கிறார்கள் இந்தப் படத்தில்.. கொரோனாவை விட்டு விட்டு இந்த அன்புக் குரங்குகளைப் பார்த்து மனசு லேசாகட்டும்.

Story first published: Monday, May 4, 2020, 16:23 [IST]
Other articles published on May 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+