Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் கிரிக்கெட்டை ஆண்ட தமிழச்சி..!! மித்தாலி ராஜ் படைத்த சாதனைகள்.. அசைக்க முடியாத ரெக்கார்ட்ஸ்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மித்தாலி ராஜ், தனது 16 வது வயதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடியேடுத்து வைத்தார்.

23 வருடமாக இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு சேவை செய்துள்ள மித்தாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10868 ரன்கள் விளாசி சாதனை படைத்திருக்கிறார். பல சாதனைகளை படைத்தவர்.

தமிழ் பெண்

தமிழ் பெண்

மித்தாலி ராஜ் ராஜஸ்தானில் பிறந்தாலும், அவர் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். மித்தாலி ராஜின் தந்தை துரை ராஜ், தாய் லீலா ராஜ். தந்தை விமானப் படை அதிகாரி என்பதால், பிற மாநிலங்களிலேயே தங்கி படித்து வளர்ந்தவர் மித்தாலி ராஜ். 1999ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய மித்தாலி ராஜ், 16 வயதில் அயர்லாந்துக்கு எதிராக சதம் விளாசினார்.

ஒருநாள் கிரிக்கெட் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் சாதனை

இதன் மூலம் சிறு வயதிலேயே மகளிர் கிரிக்கெட் சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை மித்தாலி ராஜ் படைத்தார். அந்த சாதனை இன்று வரை உடைக்கப்படவில்லை. மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (7805) அடித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 7 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை, அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையும் மித்தாலி ராஜையே சேரும்.

தொட முடியாத உச்சம்

தொட முடியாத உச்சம்

இதே போன்று மித்தாலி ராஜ், சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக முறை (64) அரைசதம் அடித்து இருக்கிறார். இதே போன்று மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 முறை அரைசதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையையும் மித்தாலி படைத்திருக்கிறார்.

முதல் வீராங்கனை

முதல் வீராங்கனை

இந்திய கிரிக்கேட் வரலாற்றிலேயே இரண்டு உலக கோப்பை பைனலுக்கு இந்திய அணியை அழைத்து சென்ற ஒரே கேப்டன், டி20 மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக 2 ஆயிரம் ரன்களை அடித்த வீராங்கனை,200 ஒருநாள் போட்டியில் விளையாடிய ஒரே வீராங்கனை,மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் போன்ற சாதனையை படைத்த மித்தாலி ராஜ், அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ, ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வென்று இருக்கிறார்.

Story first published: Wednesday, June 8, 2022, 17:55 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+