Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்கெல்லாம் அப்பவே அப்புடி.. எப்பூடி.. போட்டோ போட்டு கலக்கிய மித்தாலி ராஜ்

ஹைதராபாத்: இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

இந்திய மகளிர் டி20 அணி சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி புதிய சாதனை படைத்து திரும்பியது. அது திரும்பிய சில நாட்களிலேயே கொரோனா வந்து விளையாட்டையே முடக்கிப் போட்டு விட்டது.

இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பெரும் வரப் பிரசாதமாக அமைந்திருப்பது சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளங்கள்தான்.

கை கொடுக்கும் சமூக வலைதளங்கள்

கை கொடுக்கும் சமூக வலைதளங்கள்

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு பார்த்தாலும் விளையாட்டு வீரர்கள், வீராங்களின் பகிர்வுகள்தான் உள்ளன. ஏதாவது பேசி வீடியோ போடுவது, புதிர் போடுவது, ரசிகர்களுக்கு பதிலளிப்பது என பிசியாக உள்ளனர். இதனால் அவர்களுக்கும் ஒரு ரிலாக்ஸ் ஆகிறது. ரசிகர்களுக்கும் வீரர்களுடன் டச்சில் இருக்கும் உணர்வு கிடைக்கிறது. இந்த லாக்டவுன் சமயத்தில் இப்படித்தானே இருந்தாக முடியும்.

மித்தாலி ராஜ் புகைப்படம்

அந்த வகையில் தற்போது மித்தாலி ராஜ் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டரில் போட்டுள்ளார். அதில் அவரும் அவரது சகோதரியும் உள்ளனர். சின்னப் பாப்பா வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கூடவே இப்போது உள்ள கவர்ச்சிகரமான ஒரு புகைப்படத்தையும் அத்துடன் சேர்த்துள்ளார். அதில் Then and now, always a poser என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் மித்தாலி.

அப்போதும் இப்போதும் போஸ்

அப்போதும் இப்போதும் போஸ்

அப்போதும் இப்போதும்,, எப்பவுமே நல்லா போஸ் கொடுப்பேன் என்று தன்னைத் தானே கலாய்த்துள்ளார் மித்தாலி ராஜ். அந்த சிறு வயசுப் படத்தில் யார் மித்தாலி என்று பார்த்ததுமே சொல்லி விடலாம். அந்த புன்னகைக்கும் வாயே காட்டிக் கொடுத்து விடுகிறது. இந்தப் புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கமெண்டுகளும் குவிந்துள்ளன.

எப்பவுமே போஸ்தான்

ஒரு ரசிகர் ஒருதடவை போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டா எப்பவுமே போஸ் மட்டும்தான் கொடுப்போம் என்று மித்தாலியைக் கலாய்த்துள்ளார். இன்னொருவரோ முன்பு அழகு.. இப்ப கவர்ச்சி என்று மித்தாலி ராஜைப் பாராட்டியுள்ளார். இன்னொருவரோ இதுல யார் நீங்க ப்ளூ சட்டை போட்ட பாப்பாவா இல்லை ரெட் சட்டை போட்ட பாப்பாவா என்று வினவியுள்ளார்.

செம சாதனை படைத்த மித்தாலி ராஜ்

செம சாதனை படைத்த மித்தாலி ராஜ்

இன்று மித்தாலி ராஜுக்கு ஒரு சிறப்பான நாள். எப்படி தெரியுமா.. இதே நாளில் 2005ம் ஆண்டு மித்தாலி ராஜ், மகளிர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்களைக் குவித்தார். அப்போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியனான நியூசிலாந்தை இந்தியா வென்றது. அதன் மூலம் இந்திய மகளிர் ஒரு நாள் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது.

Story first published: Tuesday, April 7, 2020, 17:43 [IST]
Other articles published on Apr 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+