Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையில் டீ கோப்பை.. பால்கனி அருகே ஒய்யாரமாய் போஸ்.. இணையத்தில் இதயங்களை அள்ளும் மித்தாலி புகைப்படம்!

மும்பை: இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்கு அந்நாட்டுக்கு எதிரான 3 வடிவ கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது.

ஒருபுறம் போட்டிகள் சரியாக ஏற்படுத்தி தரவில்லை என்றும், ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழலில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி கடந்த ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு சென்றடைந்தது. இந்திய ஆடவர் அணியுடன் இணைந்து தனி விமானம் மூலம் லண்டன் சென்றடைந்த அவர்கள் அங்கிருந்து பிரிஸ்டல் நகருக்கு சென்றடைந்தனர். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அங்கு தான் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக அவர்கள் தற்போது குவாரண்டைன் இருந்து வருகின்றனர்.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

கடந்த 7 வருடங்களில் இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். வரும் ஜூன் 16ம் தேதி தொடங்கி ஜூன் 20ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கு பின்னர் ஜுன் 27 முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஜூலை 9ம் தேதி முதல் 3 டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது.

புகைப்படம்

புகைப்படம்

நீண்ட வருடங்களுக்கு பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டி என்பதால் இதில் வென்றே தீர வேண்டும் என இந்திய வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் மிகவும் கூலாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மித்தாலி ராஜ், கையில் டி கோப்பையுடன் மைதானத்தை வேடிக்கை பார்த்து வருகிறார்.

கூல் கேப்டன்

கூல் கேப்டன்

முன்னதாக இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் மித்தாலி ராஜின் கார சார விவாதங்கள் வெளியாகின. அதே போல ஜிம்மில் முரட்டுத்தனமாக பயிற்சி மேற்கொண்ட விடியோக்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்கும் மித்தாலியின் புகைப்படம் ட்ரெண்ட் அடித்துள்ளது.

Story first published: Wednesday, June 9, 2021, 19:54 [IST]
Other articles published on Jun 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+