சேலை கட்டும் பெண்ணுக்கொரு.. திறமை உண்டு.. ஏத்திக் கட்டிய சேலையில் பேட்டிங்.. அசத்தல் மித்தாலி!
ஹைதராபாத்: சர்வதேச மகளிர் தினம் இதோ நாளை வந்து விட்டது. உலகம் முழுவதும் சிங்கப் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடனும், கர்வத்துடனும், பெருமிதத்துடனும் இந்த நாளை எதிர்கொண்டுள்ளனர். நம்ம ஊர் மித்தாலியும் இதை வித்தியாசமாக கொண்டாடவுள்ளார்.
Recommended Video
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அழுத்தமான முத்திரை பதித்தவர் மித்தாலி ராஜ். தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர். ஹைதராபாத்தில் வசித்து வருபவர். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மறக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
மித்தாலி ராஜ் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதுதான் அனைவரையும் கவர்ந்துள்ளது. அது சேலையில் கிரிக்கெட் ஆடும் காட்சி.

மித்தாலி சேலை
அம்சமான சேலையில் அட்டகாசமாக காணப்படும் மித்தாலி ராஜ் முகத்தில் பெருமை தெறிக்கிறது. மைதானத்தின் நடுவே கம்பீரமான புடவையில் பேட்டிங் செய்கிறார் மித்தாலி. தலைக்கவசத்துடன் தன்னை நோக்கி வீறு கொண்டு வந்த பந்தை புயலைப் போல வெளுத்து அடிக்கிறார். பார்க்கவே புல்லரிக்கிறது அந்த காட்சி.
படமாகும் வாழ்க்கை வரலாறு
இதை விடுங்க.. மித்தாலியின் வாழ்க்கை வரலாறு பயோ பிக்காக எடுக்கப்படுகிறது. நடிகை டாப்சிதான் மித்தாலி வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் புடவையில் சிங்கமென சீறிப் பாயும் புலியாக மித்தாலி ராஜின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். மித்தாலி போன்று களத்தில் சீறும் பெண் சாதனையாளர்களுக்கும், சாதனை படைக்கத் துடிக்கும் இளம் பெண்களுக்கும் இந்த வீடியோ ஒரு ஆதர்ச உதாரணமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மித்தாலி சேலை
அந்த விடியோவில் மிதாலி ராஜ் அம்சமான சேலையில் அட்டகாசமாக காணப்படுகிறார். அவரது முகத்தில் பெருமை தெறிக்கிறது. மைதானத்தின் நடுவே கம்பீரமான புடவையில் பேட்டிங் செய்கிறார் மித்தாலி. தலைக்கவசத்துடன் தன்னை நோக்கி வீறு கொண்டு வந்த பந்தை புயலைப் போல வெளுத்து அடிக்கிறார். பார்க்கவே புல்லரிக்கிறது அந்த காட்சி.

"வாழ்க்கையை வாழத் துவங்கலாம்"
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மிதாலி, ஒவ்வொரு புடவையும் நம்மை காட்டிலும் அதிகமான சுவாரஸ்யங்களை பேசும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அது நம்மை அடங்கி இருக்க சொல்வதில்லை, வீறுநடை போட்டு திறமையை காட்ட வெளியில் செல்லுமாறு கூறுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த மகளிர் தினத்தில் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ சபதம் எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின விளம்பர விடியோ
இது மகளிர் தினத்தையொட்டி எடுக்கப்பட்ட விளம்பரத்திற்கான வீடியோவாகும். ஆனால் விளம்பரம் என்று இல்லாமல் பார்க்கவே அப்படி ஒரு சிறப்பாக இருக்கிறார் மித்தாலி. காரணம் இவர் ஒரு சாதனைப் பெண்.. சிங்கப் பெண்.. இந்திய விளையாட்டு உலகில் தடம் பதித்து, அழுத்தமான சாதனைகளையும் பதித்த திறமையான வீராங்கனையும் கூட.


Click it and Unblock the Notifications