Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கூலாக சூடு வைத்த மிதாலி!

பெங்களூரு: மைதானமாக இருந்திருந்தால், பேட்டால் பதில் சொல்லியிருப்பார். டுவிட்டர் தளத்தில் தன்னை கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்திருந்தவருக்கு, நறுக் என, பதில் சொல்லி அசத்தியுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்.

இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இறுதி வரை சென்று, கோப்பையை வெல்லும் வாய்ப்பை நமது அணி இழந்தது. இருப்பினும், இறுதி வரை முன்னேறிய வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் தொடர்ந்து வருகின்றன.

இதுவரை கிரிக்கெட் வீராங்கனைகள் பற்றி ஒரு வரி கூட செய்திகள் வந்ததில்லை. அதை கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான அணி உடைத்தெறிந்துள்ளது.

பதிலடி

பதிலடி

சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டபோது, இதேபோன்று உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட்டர் யார் என்று, எப்போதாவது ஆடவர் அணியினரிடம் கேட்டிருக்கிறார்களா என்று கேட்டு மடக்கினார்.

பெங்களூரில் மிதாலி

பெங்களூரில் மிதாலி

கர்நாடகா கிரிக்கெட் மையம் என்ற புதிய கிரி்க்கெட் அகாடெமி துவக்க விழா பெங்களூருவில் நடந்தது. அதில், மிதாலி ராஜ் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். சக வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, மமதா மாபென், நூஷின் அலி காதர் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படத்தை டுவிட்டரில் பதிவு செய்தார் மிதாலி. இந்த சிறப்பான பெண்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என, மிதாலி டுவிட் செய்திருந்தார்.

வக்கிர டிவீட்

படத்தை பார்த்து பலர் ரிடுவீட் செய்து, பாராட்டியுள்ளனர். ஒரு குசும்பு பிடித்தவர், இந்த போட்டாவில் என்ன தவறு கண்டுபிடிக்கலாம் என்று, `எல்லாம் ஓகே. மிதாலி. உங்கள் அக்கிளில் ஏன் வேர்த்து போயுள்ளது' என்று, நக்கலாக டுவிட் செய்திருந்தார். மைதானத்தில் எதிரணியை பேட்டிங்கில் விளாசியுள்ள மிதாலிக்கு, இதெல்லாம் ஜூஜிபியாச்சே. அவர் அளித்த பதில்தான், அவருடைய சிறப்புக்கு மேலும் பெருமை சேர்த்தது.

வியர்வை சிந்தியதில் பெருமையே

வியர்வை சிந்தியதில் பெருமையே

`மைதானத்தில் சிந்திய வேர்வையால்தான் நான் தற்போது இந்த நிலையில் உள்ளேன். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. கிரிக்கெட் அகாதெமி திறப்பு விழாவில் வேர்வை சிந்தியதில் பெருமையே.'நக்கலான கேள்விக்கு நறுக்கென்று பதிலளித்த மிதாலியை, அவருடைய ரசிகர்கள் இந்திய அணிக்கு கிடைத்த மற்றொரு கேப்டன் கூல் என்று கொண்டாடுகின்றனர்.

Story first published: Tuesday, August 22, 2017, 16:13 [IST]
Other articles published on Aug 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+