Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய சம்பவக்காரர் போல.. பிசிசிஐ தலைவராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்.. யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

மும்பை: இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வட்டமடித்து வரும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? என்பது தான். இந்த பதவிக்கு வருபவரின் அதிகாரம் உச்சத்தில் இருக்கும் என்பதால், அந்த அதிகாரத்தை கைப்பற்ற பலரும் முயன்று வருகிறார்கள். அண்மையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயர் கூட அடிபட்டது.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் பிசிசிஐ அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி நீடித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த பிசிசிஐ தலைவராக மிதும் மன்ஹாஸ் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 28ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Mithun Manhas

இதனிடையே யார் இந்த மிதுன் மன்ஹாஸ் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் மிதுன் மன்ஹால் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது இல்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் ஏராளமான போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஒருவேளை மிதுன் மன்ஹால் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டால், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் பிசிசிஐ தலைவரான முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ஏனென்றால் இவருக்கு முன்பாக இருந்த கங்குலி, ரோஜர் பின்னி உள்ளிட்டோர் இந்திய அணிக்காக மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளனர். ஆனால் மிதுன் மன்ஹால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியதில்லை. அதற்காக கிரிக்கெட் அனுபவம் இல்லை என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிதுன் மன்ஹாஸின் சாதனைகள் கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தெரியும்.

1997/98 ஆண்டில் டெல்லி அணிக்காக அறிமுகமான மிதுன் மன்ஹாஸ், மிடில் ஆர்டர்களில் ஆயிரக்கணக்கான ரன்களை விளாசியவர். ஆனால் மிதுன் மன்ஹாஸ் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண், கங்குலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருந்தனர். இதனால் மிதுன் மன்ஹாஸ்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவே இல்லை.

அதிலும் 2007-08 ரஞ்சி சீசனில் டெல்லி அணியை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அந்த சீசனில் மட்டும் 921 ரன்களை விளாசி மிரள வைத்தார். அதேபோல் தேவையான நேரத்தில் ஆஃப் ஸ்பின் பவுலராகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். 157 முதல்தர போட்டிகளில் விளையாடி 9,714 ரன்களை விளாசியவர். அதில் 27 சதங்களும், 49 அரைசதங்களும் அடங்கும்.

ஐபிஎல் தொடரில் டெல்லி, புனே மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக ஆடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் களத்தை விட்டு வெளியேறிய பின், ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் இருந்தார். இதனால் மிதுன் மன்ஹாஸ்க்கு கிரிக்கெட் மற்றும் நிர்வாக அனுபவம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 21, 2025, 9:53 [IST]
Other articles published on Sep 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+