டல்லாஸ் : அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் எம்.ஐ. நியூயார்க் அணி கைப்பற்றியது. சிஎஸ்கே, மும்பை , கேகேஆர் உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் நிர்வாகம் வாங்கியதால், ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த தொடரின் சியாட்டல் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் எம்.ஐ. நியூயார்க் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சியாட்டல் அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

நவ்மன் அன்வர் 9 ரன்கிளில் ஆட்டமிழக்க, ஜெயசூர்யா 16 ரன்களில் வெளியேறினார். இதில் ஹென்ரிச் கிளாசென் 4 ரன்களிலும், இமாத் வசீம் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தனி ஆளாக நின்று போராடிய குயின்டன் டி காக் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 34 பந்துகளில் குயின்டன் டி காக் அரைசதம் கடந்தார்.
இதனையடுத்து 13.5 ஓவரில் சியாட்டல் அணி 100 ரன்களை கடந்தது. இறுதியில் ரஞ்சானே 16 பந்துகளில் 29 ரன்களும், சியாட்டல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. எம்.ஐ. அணியின் டிரெண்ட் பௌல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்ததினார். இதனையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணியில் ஸ்டீவன் டைலர் மற்றும் சியான் ஜாகங்கீர் 10 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்து நிக்கோலஸ் பூரான் தனி ஆளாக வந்து அதிரடியாக விளையாடினார். நிக்கோலஸ் பூரானின் ஆட்டம் பட்டாசை தெறிக்க விட்டது போல் இருந்தது. தனி ஆளாக நின்று மும்பையின் தலையெழுத்தை மாற்றிய பூரான் 16 பந்தில் அரைசதம் அடித்தனர்.
இதில் 3 பவுண்டரிகள், 6 சிக்சர் அடங்கும். அத்துடன் நிற்காமல் யார் மீதோ இருகும் கோபத்தை பந்தில் காட்டி இருப்பார் போல, ரன் அடிக்கும் வேகத்தை மட்டும் பூரான் 40 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து அவர் அதிரடியை காட்ட 55 பந்துகளில் 137 ரன்கள் விளாசினார். ஒட்டுமொத்தமாக 13சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் எம்.ஐ அணி 16 ஓவரில் 184 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது.