Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2023 -அமெரிக்காவிலும் தொடரும் சிஎஸ்கேவின் ஆதிக்கம்.. மும்பை அணி தோல்வி.. கான்வே அதிரடி

டெக்சாஸ் : அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னையின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பையின் நியூயார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர் கான்வே அபாரமாக விளையாடி வருகிறார்.

கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனி ஆளாக நின்று இன்னிங்சை ன்னேறி கொண்டு சென்றார். கேப்டன் டுபிளசிஸ் 8 ரன்களில் வெளியேறினார். கோடி செட்டி 12 ரன்களிலும், டேவிட் மில்லர் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, மிட்செல் சாட்ணர் அபாரமாக விளையாடி 2 சிக்சர்களுடன் 13 பந்துகளுடன் 27 ரன்கள் சேர்த்தார்.

 MLC 2023 - Texas super kings beat MI New york by 17 runs

எனினும் இறுதியில் பிராவோ 5 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 1 ரன்னிலும், மிலிந்த் குமார் 1 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. எம்.ஐ. நியூயார்க் பந்துவீச்சு தரப்பில் ரபாடா, டிரெண்ட் பௌல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஆரம்பம் முதலே தடுமாறியது. மோனங் பட்டேல் டக் அவுட்டாகியும், ஸ்டீவன் டைலர் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரான் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர் ஜாகங்கீர் 41 ரன்களில் வெளியேறினார்.

எனினும் முக்கிய கட்டத்தில் பொலார்ட் டக் அவுட்டாகியும், ஹமாத் 13 ரன்களிலும் வெளியேறினார். இதே போன்று கடைசி ஓவரில் டிம் டேவிட், ரபாடா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கு இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, July 18, 2023, 11:16 [IST]
Other articles published on Jul 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+