Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2024- சிஎஸ்கே தம்பி TSK அணிக்காக பொளந்த டுபிளஸிஸ்.. 57 பந்துகளில் சதம் விளாசல்

அமெரிக்கா : அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக மேஜர் கிரிக்கெட் லீக் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் அமெரிக்க நகரங்களை மையமாக வைத்து அணிகளை வாங்கி இருக்கிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்ஸாஸ் நகரத்தை மையமாக வைத்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வாங்கி இருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக டுபிளசிஸ் செயல்படுகிறார்.

MLC 2024 major cricket league faf duplessis Texas super kings


இதேபோன்று கான்வே, மார்க்ஸ் ஸ்டோனிஸ், ட்வைன் பிராவோ, நவீன் உல் ஹக் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே மற்றும் நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர் கான்வே மற்றும் டுபிளசிஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

வாஷிங்டன் அணி பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி பவர் பிளே முடிவில் 67 ரன்கள் அடித்தது. இதில் டிஎஸ்கே அணிக்காக விளையாடிய டுபிளசிஸ் 32 பந்துகளில் முதல் அரை சதத்தை கடந்தார். இதில் 8 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.அபாரமாக விளையாடிய கான்வே 26 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்கள் சேர்த்த நிலையில் டுபிளசிஸ் மட்டும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் இதில் அடங்கும். இதேபோன்று பிராவோ இரண்டு பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.

அபாரமாக விளையாடிய கேப்டன் டுபிளசிஸ் 57 பந்துகளில் சதம் அடித்த நிலையில், அடுத்த பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். டுபிளசிஸின் இந்த ஆட்டத்தில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் டிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய வாஷிங்டன் அணியில் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 12 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதே போன்று ஸ்மித் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி கைவிடப்பட்டது.

Story first published: Tuesday, July 9, 2024, 18:42 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+