Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடருக்கு இந்த தங்கத்தை அப்படியே தூக்கிட்டு வாங்க பா! அமெரிக்காவில் கலக்கி வரும் இந்திய வீரர்

பிரான்சிஸ்கோ : அமெரிக்க அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சௌரப் நெட்ராவல்கர், எம்எல்சி கிரிக்கெட் தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஐபிஎல் பாணியில் அமெரிக்காவில் எம்எல்சி கிரிக்கெட்டு தொடர் நடைபெற்று வந்தது.

இதில் வாஷிங்டன் அணிக்காக களம் இறங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் நட்ராவல்கர் அபாரமாக பந்து வீசி அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். சான் பிரான்சிஸ்கோ அணிக்கு எதிராக இறுதி போட்டியில் ஒரு விக்கெட், பிளே ஆப் சுற்றில் இரண்டு விக்கெட்டுகளை நெட்ராவல்கர் எடுத்தார்.

MLC 2024 Saurabh Netravalkar Major cricket League 2025

லாஸ் ஏஞ்சலஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் சியாட்டல் அணிக்கு எதிராக மூன்று விக்கெட், டெக்ஸாஸ் அணிக்கு எதிராக இரண்டு விக்கெட் நியூயார்க் அணிக்கு எதிராக மூன்று விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோன்று நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 ஆட்டங்களில் விளையாடிய சௌரப் நட்ராவல்கர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் அவருடைய எக்கனாமி வெறும் 6.63 என்ற அளவில் இருந்தது. தொடர்ந்து இரண்டு தொடர்களில் சவுரப் நெட்ராவல்கர் அவர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்காக அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய நெட்ராவல்கர், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வந்தார்.

தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வேலை செய்து வந்த இடத்தில் அமெரிக்கா தேசிய அணியில் இடம் பிடித்து அசத்திய சவுரப் நெட்ராவால்கர் தற்போது எம்எல்சி தொடரிலும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் நெட்ராவல்கரை பெற பல்வேறு ஐபிஎல் அணிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் சௌரப் நெட்ராவல்கர் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பத்து கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சாப்ட்வேர் துறையில் சவுரப் நெட்ராவல்கர் இனி வேலைக்கு செல்ல தேவையில்லை என்ற அளவுக்கு கிரிக்கெட் அவரை காப்பாற்றப் போகிறது. பிடித்த விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால் அதனால் நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்தை அடையாளம் என்பதற்கு சவுரப் நெட்ராவல்கர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

Story first published: Monday, July 29, 2024, 18:23 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+