Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2024 - அமெரிக்காவிலும் சிஎஸ்கே தம்பியிடம் அசிங்கப்பட்ட மும்பை.. டுபிளசிஸ் அதிரடியால் TSK வெற்றி

டெக்சாஸ் : ஐபிஎல் பாணியில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் எம்ஐ நியூயார்க் அணியை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ நியூயார்க் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடியான கான்வே மற்றும் கேப்டன் டுபிளசிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்குள் 85 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டுபிளசிஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்.

MLC 2024 faf duplessis Texas super kings

38 பந்துகளில் அவர் 61 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் கான்வே 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து, வெளியேறினார். ஆரோன் 22 ரன்களும், மார்க்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களும் எடுக்க டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

எம்ஐ நியூயார்க் அணி தரப்பில் ட்ரெண்ட் புவுல்ட் இரண்டு விக்கெட், ரசித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதனை அடுத்து எம் ஐ நியூயார்க் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அந்த அணியின் தொடக்க வீரர் கிளிண்டன் 7 ரன்களிலும் ஸ்டீவன் டைலர் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

கேப்டன் பொலார்ட் 17 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்து அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதிரடி வீர டிம் டேவிட்டும் 10 பந்துகளில் ஆறு ரன்களில் வெளியேற நடுவரிசையில் களம் இறங்கிய மோனாக் பட்டேல் மட்டும் 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து மும்பை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் ரசீத் கான் கீழ் வரிசையில் களமிறங்கி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்து சிக்சர் நான்கு பவுண்டரி என பறக்க 22 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். ஒரு கட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 50 ரன்கள் ஆட்டம் இழந்தார். இதனால் எம் ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டி எஸ் கே பந்துவீச்சில் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 50 ரன்கள் 4 ஓவரில் விட்டுக் கொடுத்தாலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக் விக்கெட் ஏதுமின்றி நான்கு ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். பிராவோவும் விக்கெட் ஏதுமின்றி நான்கு ஓவரில் 32 ரன்கள் கொடுத்தார். முஹம்மது மோஷின் நான்கு ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Story first published: Monday, July 15, 2024, 16:18 [IST]
Other articles published on Jul 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+