Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தம்பினா சும்மாவா.. கடைசி பந்து வரை திக்திக்.. கம்மின்ஸ் கொடுத்த அதிர்ச்சி.. யாருக்கு வெற்றி?

டல்லாஸ்: எம்எல்சி தொடரின் சேலஞ்சர் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சிஎஸ்கே அணியின் தம்பியான டிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. இதனால் டிஎஸ்கே அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளதால், சிஎஸ்கே ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சேலஞ்சர் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டிஎஸ்கே அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் 53 பந்துகளில் 101 ரன்களும், ஹசன் கான் 15 பந்துகளில் 27 ரன்களும் விளாசினர்.

ipl 2025 MLC 2024

இதன்பின் டிஎஸ்கே அணி சார்பாக டூ பிளசிஸ் - கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே டூ பிளசிஸ் அதிரடியில் பொளந்து கட்டினார். கம்மின்ஸ் வீசிய 4வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. அதிரடியாக விளையாடிய அவர் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ஆரோன் ஹார்டி களமிறங்கினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் டிஎஸ்கே அணி 77 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ஹார்டி 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மிலிந்த் குமாரும் 2 ரன்களில் வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் டிஎஸ்கே அணி 10 ஓவர்களில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கான்வே - ஜோஷ்வா டிரம்ப் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. இதனால் டிஎஸ்கே அணி வெற்றிபெற 30 பந்துகளில் 64 ரன்கள் தேவையாக இருந்தது. அடுத்த 2 ஓவர்களில் 24 ரன்களை விளாச, ஆட்டத்தில் டிஎஸ்கே அணியின் கைகள் ஓங்கியது.

பின்னர் 18 மற்றும் 19 ஆகிய ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதால், கடைசி ஓவரில் டிஎஸ்கே வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது. இதனை வீச கம்மின்ஸ் அழைக்கப்பட்டார். பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் சைட் திசையிலேயே பவுலிங் செய்ததால், பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு, டிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பாக ஆடிய கான்வே 62 ரன்களும், டிரம்ப் 56 ரன்களும் சேர்த்தனர்.

Story first published: Saturday, July 27, 2024, 10:00 [IST]
Other articles published on Jul 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+