Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்காவிலும் ஆப்பு.. மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே தம்பி.. பிளே ஆஃப் சுற்றில் மிரட்டிய டூ பிளசிஸ்!

டல்லாஸ்: எம்எல்சி தொடரின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் எலிமினேட்டர் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மும்பை நியூயார்க் அணி களமிறங்கியது. இதனால் சிஎஸ்கே - மும்பை அணிகளின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதன்பின் டாஸ் வென்ற டிஎஸ்கே அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பின்னர் முதல் ஓவரிலேயே பிரெவிஸ் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் மோனாங்க் படேல் - ரஷித் கான் கூட்டணி வெளுத்து வாங்கியது. சிறப்பாக ஆடிய ரஷித் கான் 30 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 55 ரன்களையும், மோனாங்க் படேல் 41 பந்துகளில் 48 ரன்களையும் விளாசினார். இதன் காரணமாக மும்பை நியூயார்க் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது.

ipl 2025 MLC 2024

டிஎஸ்கே அணி தரப்பில் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன்பின் 164 ரன்கள் என்ற இலக்குடன் டூ பிளசிஸ் - கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் முதல் 3 ஓவர்கள் நிதானம் காட்டிய நிலையில், அதன்பின் கியரை மாற்றி அதிரடிக்கு திரும்பினர். இதன் காரணமாக 6 ஓவர்கள் முடிவில் டிஎஸ்கே அணி விக்கெட் இழப்பிற்கு அணி 49 ரன்களை சேர்த்தது.

அதிரடியாக விளையாடிய டூ பிளசிஸ் 35 பந்துகளில் அரைசதத்தை எட்ட, 11 ஓவர்களில் டிஎஸ்கே ஸ்கோர் 80 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து பொல்லார்ட் வீசிய 12வது ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. சிறப்பாக விளையாடிய கேப்டன் டூ பிளசிஸ் 47 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 72 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஆரோன் ஹார்டி களமிறங்கினார்.

பின்னர் 15 ஓவர்கள் வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே - ஹார்டி கூட்டணி, பின்னர் அதிரடியை பொளந்து கட்டியது. போல்ட் வீசிய 18வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட, பின்னர் 19வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி விளாசி டிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலமாக 18.3 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி 9 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் மும்பை நியூயார்க் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக டிஎஸ்கே அணி குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த கான்வே 43 பந்துகளில் 51 ரன்களும், ஹார்டி 22 பந்துகளில் 40 ரன்களையும் விளாசி அசத்தினர். இதன் மூலமாக டிஃபெண்ட் சாம்பியனான மும்பை நியூயார்க் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 25, 2024, 10:00 [IST]
Other articles published on Jul 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+